குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலக காரணம் இதுதான்.. வெளியான புது தகவல்!

சென்னை : குக்வித் கோமாளியிலிருந்து மணிமேகலை விலகியதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

குக் வித் கோமாளி என்ற புதுவிதமான சமையல் நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பி அதில் வெற்றியும் கண்டுள்ளது. குக்குகள் சமைக்க கோமாளிகள் கூடவே இருந்து சொதப்ப வேண்டும்.

பலரின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

குக்வித் கோமாளி சீசன் 4

குக்வித் கோமாளி சீசன் 4

குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இதுவரை மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில், நான்காவது சீசன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை பார்க்க குக்வித் கோமாளி பிரியர்கள் தொலைக்காட்சி முன் சரியாக ஆஜராகி விடுகின்றனர்.

பாலா இல்லாதது வருத்தம்

பாலா இல்லாதது வருத்தம்

இதில், புகழ், பாலா, மணிமேகலை, தங்கதுரை, சுனிதா, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா, சில்மிச சிவா, குரோஷி உள்ளிட்டோர் கோமாளிகளாக உள்ளனர். கடந்த சீசன்களில் கோமாளியாக அசத்திய பாலா, தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதால், அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இடம் பெறவில்லை. இதனால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

புதிய போட்டியாளர்கள்

புதிய போட்டியாளர்கள்

குக்காக நடிகை ஷெரின், நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை விசித்ரா, நடிகர் ராஜ் ஐயப்பா, விஜே விஷால், சிவாங்கி, ஜிகர்தண்டா நடிகர் காளையன், கிஷோர் ராஜ்குமார், ஆன்ட்ரின் நௌரிகட், மைம் கோபி என பத்து பேர் கலந்து கொண்டனர். இதில், கிஷோர் ராஜ்குமார் முதல் நபராக வெளியேறினார்.

மணிமேகலை வெளியேறினார்

மணிமேகலை வெளியேறினார்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக மணிமேகலை நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். அதில், குக் வித் கோமாளியில் எனது கடைசி எபிசோட் இன்று. நானே வருவேன் கெட்-அப்பில் நான் வரமாட்டேன் என்ற அறிவித்து இருந்தார். மணிமேகலையின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில், மணிமேகலை இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அதாவது, மணிமேகலைக்கும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் இருந்து வந்ததாகவும், இந்த மோதல் காரணமாகவே அவர் விலகியதாகவும் சொல்லப்படுகிறது. அது மட்டுமில்லாமல் மணிமேகலை கர்ப்பமாக இருப்பதாவும் ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால், அவர் விலகியதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.

Read more about: cooku with comali 4
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X