Nayanthara - அவருக்கு பதில்தான் ஜவானில் நயன்தாராவா?.. வெளியான ஷாக் தகவல்.. என்ன அட்லீ இதெல்லாம்?
மும்பை: Nayanthara (நயன்தாரா) நடிகை நயன்தாராவை அட்லீ எதற்காக ஜவான் படத்தில் நடிக்க வைத்தார் எனது தொடர்பான தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவிலிருந்து தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் நயன்தாரா. அழகு மட்டுமின்றி திறமையும் கொண்டிருப்பதால் அவரை தமிழ் திரையுலகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. காதல் விவகாரங்களில் சிக்கி பல தனிப்பட்ட தாக்குதல்களை சந்தித்தவர் அவர். ஆனால் அதையெல்லாம் கண்டு அஞ்சாமல் ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டெழுந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

திருமணம்: நானும் ரௌடிதான் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனை காதலித்த நயன்தாரா கடந்த வருடம் அவரை திருமணம் செய்துகொண்டார். பிறகு வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களை பெற்றுக்கொண்டனர். உயிர், உலக் என்று மகன்களுக்கு பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. திருமணம் செய்து குழந்தை பெற்றாலும் தனது நடிப்பு பயணத்தை தீவிரமாக தொடர்ந்துவருகிறார் நயன்தாரா. அவருக்கு விக்னேஷ் சிவனும் முழு சப்போர்ட் செய்துவருகிறார்.
ஹிந்தியில் என்ட்ரி: இத்தனை வருடங்கள் தமிழ், தெலுங்கில் கலக்கி அவர் தற்போது ஜவான் படத்தின் முலம் ஹிந்தியில் என்ட்ரி ஆகியிருக்கிறார். அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் அந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார் இந்தப் படம் வெற்றி பெற்றால் பாலிவுட்டிலும் ஒரு பெரிய ரவுண்டு வரலாம் என்று கணக்கு போட்டிருந்தார். அவர் கணக்குபடி ஜவான் படம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
அடுத்த படம்: இந்த சூழலில் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் கவனம் ஈர்த்ததால் நயனுக்கு அடுத்த ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படி சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிக்கவிருக்கும் படத்தில் நயன் நடிக்கிறார் என்றும் அதற்காக 12 கோடி ரூபாய் அவருக்கு சம்பளம் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
ராசியான நடிகை: இதற்கிடையே அட்லீ தன்னுடைய முதல் படமான ராஜா ராணி படத்தில் நயன்தாரா நடித்ததாலும் படம் ஹிட்டடித்ததாலும் நயனை ராசியான நடிகையாக பார்க்கிறார். எனவேதான் ஹிந்தியிலும் தன்னுடைய முதல் படத்தில் அவரை நடிக்க வைத்தார் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அதுகுறித்து புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.
சமந்தா: அதாவது ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்து ஏற்கனவே பாலிவுட்டில் பரிச்சயமாகியிருக்கும் சமந்தாவைத்தான் முதன்முதலில் ஜவானில் நடிக்க அட்லீ அணுகியதாகவும் ஆனால் சமந்தாவோ தன்னுடைய உடல்நிலையை காரணம் காட்டி நடிக்கவில்லை. அதன் பிறகுதான் அட்லீ நயன்தாராவிடம் வந்தார் என்று கூறப்படுகிறது. பட ரிலீஸுக்கு முன்னதாக தன்னைவிட தீபிகா படுகோனேவுக்கு அட்லீ முக்கியத்துவம் கொடுத்துவிட்டார் என்று நயன் கோபப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











