பிரியா பவானி சங்கரை கைவிட்ட காதலன்.. பிரிவுக்கு காரணம் என்ன.. பயில்வான் ரங்கநாதன் சொல்வது என்ன!

சென்னை : நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் அவரை ஏமாற்றிவிட்டதாகவும், இவர்களின் பிரிவுக்கு என்ன காரணம் என்றும் பயில்வான் ரங்கநாதன் புட்டுபுட்டு வைத்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்த பிரியா பாவனி சங்கர், தற்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார்.

பல படங்கள் கைவசம் இருக்கும் போதும் சம்பளத்தை ஏற்றாமல் இருப்பதால் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக இருக்கிறார்.

பிரியா பவானி சங்கர்

பிரியா பவானி சங்கர்

நடிகை பிரியா பவானி சங்கர் அண்மையில் கடற்கரையோரம் புதிய வீடுவாங்கி காதலர் ராஜவேலுடன் குடியேறினார். மேலும், புதியதாக ரெஸ்டாரண்ட் ஒன்றையும் திறந்து தனது கனவுகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றி வந்த நேரத்தில், யார் கண்பட்டதோ தெரியவில்லை,பிரியா பவானி சங்கர் தனது காதலரை பிரிந்து விட்டதாக தகவல் வெளியாகி வருகின்றன.

எதார்த்தமான நடிகை

எதார்த்தமான நடிகை

இதுகுறித்து, சினிமா பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ளார். அதில், பிரியாபாவனி சங்கர் தொலைக்காட்சி செய்திவாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர், இதுவரை ஆபாசமான கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை, குடும்ப பாங்கான வேடம், எதார்த்தமான அடுத்த வீட்டு பெண் போலத்தான் இயல்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.

லிவ்விங் டு கெதர் ரிலேஷன் ஷிப்

லிவ்விங் டு கெதர் ரிலேஷன் ஷிப்

ஆனால், தனக்கு ஒரு காதலர் இருக்கிறார், அவர் கல்லூரி காதலர் என்பதை பிரியா பவானி சங்கர் வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார். அண்மையில் அவர் லட்சியக்கனவாக வைத்திருந்த ஈசிஆரில் ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்ற கனவையும் நிறைவேற்றி விட்டார், அந்த பங்களாவில் தனது காதலருடன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.

காதலன் ஏமாற்றிவிட்டார்

காதலன் ஏமாற்றிவிட்டார்

மோகம் 30 நாள் என்று சொல்வார்கள், அதுபோல, பிரியா பாவனி சங்கருக்கும் அவரது காதலுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மன அழுத்தத்தில் இருந்த பிரியா, தனது நெருங்கிய தோழிகளிடம், என் காதலர் என்னை ஏமாற்றி விட்டார் என்றும், நான் நினைத்த மாதிரி அவர் இல்லை என்று புலம்பி இருக்கிறார்.

பிரிவுக்கு காரணம் இதுதான்

பிரிவுக்கு காரணம் இதுதான்

சினிமாவில் நடிக்க வந்துவிட்டாலே, நடிகர்களுடன் நெருங்கி நடிக்க வேண்டும், வெளியூரில் படப்பிடிப்பு என்றால், பல நாட்கள் அங்கேயே தங்கி இருக்க வேண்டும் இது எல்லாம் தேவையில்லை என்று பிரியா பவானி சங்கரின் காதலன் நினைத்ததாகவும், திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகும்படி காதலன் கூறியுள்ளார். ஆனால் பிரியா பாவனி சங்கர் திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால்,இருவருக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X