மகள் மீது வெறுப்பு.. ரஜினி வீட்டில் அடுத்த பஞ்சாயத்து ஆரம்பம்?.. பற்றவைத்த பயில்வான் ரங்கநாதன்
சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) தனது மகளை பார்க்கவே பிடிக்காததால் மாலத்தீவுக்கு ரஜினிகாந்த் சென்றிருப்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.
ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் மோகன் லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு, தமன்னா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆகஸ்ட் 10ஆம் தேதி பான் இந்தியா படமாக ஜெயிலர் ரிலீஸாகவிருக்கிறது. ரஜினிகாந்த் இதற்கு முன்னர் நடித்த தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் தோல்வியடைந்திருப்பதால் ஜெயிலர் படம் கட்டாயம் ஹிட் ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருக்கிறார்.

கவனம் ஈர்த்த சிங்கிள்கள்: அவரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில்தான் படத்தின் க்ளிம்ப்ஸும், இரண்டு சிங்கிள்களும் அமைந்திருக்கின்றன. முதல் சிங்கிளான காவாலா பாடலில் தமன்னா அசால்ட்டாக ஸ்கோர் செய்துவிட இரண்டாவது சிங்கிளான ஹூக்கும் பாடல் முழுக்க முழுக்க ரஜினிகாந்த்துக்காக உருவாக்கப்பட்டிருந்தது. அதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டனர்.
பரபரப்பை உண்டு பண்ணிய வரிகள்: குறிப்பாக பாடலில் இடம்பெற்ற பல வரிகள் ரஜினிதான் ஒரே சூப்பர் ஸ்டார்; அந்த இடத்துக்கு எத்தனை பேர் போட்டி போட்டாலும் அதனை பிடிக்க முடியாது என்பதை உணர்த்தும் வகையில் இருந்தன. அதுமட்டுமின்றி இந்த வரிகள் அனைத்துமே விஜய்யை தாக்குகிறது என்ற கருத்து எழ, ரஜினி ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதிக்கொண்டனர். இந்தச் சூழலில் பாடலை எழுதிய சூப்பர் சுப்புவுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
லால் சலாம்: இதற்கிடையே ரஜினிகாந்த் தனது மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் கௌரவ தோற்றத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதற்கான ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது. இதனையடுத்து ஞானவேல் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். எனவே குட்டி ரெஸ்ட் எடுப்பதற்காக சில நாட்களுக்கு முன்பு மாலத்தீவுக்கு சென்றார் ரஜினி. அங்கு ரிலாக்ஸாக கடற்கரையில் வாக்கிங் செல்லும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது.
ஏன் மாலத்தீவுக்கு: எப்போதும் ரஜினிகாந்த் இமயமலை செல்வதைத்தான் வழக்கமாக வைத்திருப்பவர். ஆனால் இந்த முறை எதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. அதற்கு அவரது உடல்நிலைதான் காரணம் என ஒஎரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் பயில்வான் ரங்கநாதன் தற்போது வேறு ஒரு காரணத்தை கூறியிருக்கிறார்.
பயில்வானின் பேச்சு: அவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், "லால் சலாம் படத்தை இயக்கியபோது ஐஸ்வர்யா தனது உதவி இயக்குநருடன் காதலில் விழுந்துவிட்டார். அவரை திருமணம் செய்துகொள்ள ஆசை இருப்பதாக ரஜினியிடமும் சொல்லியிருக்கிறார். அதை கேட்ட ரஜினி ரொம்பவே டென்ஷன் ஆகி மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். எனவே மன அமைதிக்காகத்தான் அவர் மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார். இந்த விவகாரம் கூடிய விரைவில் விஸ்வரூபம் எடுக்கும்" என பேசியிருக்கிறார்.
தனுஷும், ஐஸ்வர்யாவும் தற்போது பிரிந்து வாழ்ந்தாலும் சட்டப்பூர்வமாக இன்னமும் விவாகரத்து வாங்கவில்லை. நிலைமை இப்படி இருக்க பயில்வான் ரங்கநாதன் மேற்குறிப்பிட்டபடி பேசியிருப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் பயில்வான் எப்போதும் அவதூறுதான் பரப்புவார் என்பதால் இதனை கண்டுகொள்ள தேவையில்லை எனவும் ரஜினி ரசிகர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











