வெறித்தனமான ஃபர்ஸ்ட் ஆஃப் .. “விக்ரம்“ பட வெற்றிக்கு இதுதான் காரணம் !

சென்னை : கமலின் விக்ரம் படத்தை பார்த்த ரசிகர்கள் படத்தின் மகத்தான வெற்றிக்கு, முக்கிய காரணமே கமல் தான் என சோஷியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படத்தில், கமலுடன் , விஜய்சேதுபதி, பக்த் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், சேம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, சம்பத்ராம், ஹரிஷ் பெறடி, ஆண்டனி வர்கீஸ், சிவானி, மகேஸ்வரி, மைனா, நந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஃபஹத் ஃபாசில்

ஃபஹத் ஃபாசில்

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளை கொன்ற குற்றவாளிகளை பிடிக்க ஃபஹத் ஃபாசில் தலைமையிலான ரகசிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கு காவல்துறையைவிட கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்தக் குழு,போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளை கொன்றது யார்? அவர்கள் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து ஆராய்கிறது.

அழகான கதை நகர்வு

அழகான கதை நகர்வு

முதல் பாதியில் காளிதாஸ் ஜெயராமின் மரணம், ரகசிய பிரிவுத் தலைவராக வரும் ஃபஹத் ஃபாசிலின் மிரட்டலான நடிப்பு. கஞ்சா அடித்ததும் வெகுண்டெழுந்து சண்டைபோடும் விஜய்சேதுபதி என, முதல் பாதியை ஃபஹத் ஃபாசில் மற்றும் விக்ரமிடம் ஒப்படைத்துவிட்டு கதையை நகர்த்தியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

வெற்றிக்கு காரணம் இதுதான்

வெற்றிக்கு காரணம் இதுதான்

இரண்டாம் பாதிக்கு மேலே கதையில் நுழைந்து தட்டி தூக்கி உள்ளார் கமல். முதல் பாதியில் கமல் பெயருக்கு வந்து போவது அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இருந்தாலும், ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யாவின் கதாபாத்திரம் என அனைவருக்கும் கூடுதலாக ஸ்கிரீனில் ஸ்பேஸ் கொடுத்து இருக்கிறார் கமல். இயக்குநரை நிதானமாக வேலைபார்க்கவிட்ட கமலின் பெருந்தன்மைதான் விக்ரம் படத்தின் மகத்தான வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது.

அதிரடி ஆக்ஷன்

அதிரடி ஆக்ஷன்

அன்பறிவு மாஸ்டர்ஸ் ஸ்டண்ட் இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக வெளியாகி இருக்கும் விக்ரம் படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். குறை ஏதும் சொல்ல முடியாத அளவுக்கு படம் தரமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X