“ விக்ரம்“ வெற்றிக்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த லோகேஷ் கனகராஜ் !

சென்னை : விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கான காரணம் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து பேசினார்.

கடந்த ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது.

கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், சிறப்பு தோற்றத்தில் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கும் இப்பட பாடல்கள் அனைத்துமே செம ஹிட்.

கமலை பார்த்து வளர்ந்தவன்

கமலை பார்த்து வளர்ந்தவன்

விக்ரம் படத்தில் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பேசிய லோகேஷ் கனகராஜ், இந்த படத்தை யூனிவர்ஸ் அளவுக்கு பேசுவதை கேட்கும் போது கொஞ்சம் பயமா இருக்கு. கமல் சாருக்கு படம் பண்ணும் போது கொஞ்சம் பயமா தான் இருந்தது. ஏன் என்றால், சிறுவயதிலிருந்தே இவரின் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான்.

வெற்றிக்கு இதுதான் காரணம்

வெற்றிக்கு இதுதான் காரணம்

கமல் சார் முழுமையாக சுதந்திரத்தை எனக்கு கொடுத்தார். ஏன் என்றால் கைதி படத்தின் க்ராஸ்ஓவர் வைத்தது, அந்த கதாபாத்திரத்தை படத்தில் கொண்டுவருவது ஒரு புதுமையான விஷயம். கமல் சார் இந்த படத்தை நன்றாக புரிந்து கொண்டது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என்றார். அதற்காக எத்தனை முறை அவருக்கு நன்றி கூறினாலும் பத்தாது என்றார்.

கமல் கொடுத்த அட்வைஸ்

கமல் கொடுத்த அட்வைஸ்

விக்ரம் படத்தின் முதல் காட்சி முடிந்ததும்,கமல் சார் எனக்கு போன் செய்து படம் வெற்றி பெற்றுவிட்டது வாழ்த்துக்கள் என்றார். இந்த படத்தை முடித்துவிட்டோம் என்று ப்ரேக் எடுக்காதே, அடுத்த கதைக்கு ரெடியாகு என்றார் இது அவர் கொடுத்த அட்வைசாக நான் எடுத்துக்கொள்கிறேன். கூடுதல் பொறுப்புடன் அடுத்த படத்திற்கு செல்கிறேன் என்றார் லோகேஷ் கனராஜ்.

75 கோடி வசூல்

75 கோடி வசூல்

இந்த விழாவில் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் லோகேஷ்ராஜ், உதயநிதி, ஆகியோர் பங்கேற்றனர். விக்ரம் படத்தை தமிழில் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் வெளியிட்டு இருந்தார். விழாவில் பேசிய ஸ்டாலின் விக்ரம் படம் 3வது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இப்போதே 75 கோடி வசூலாகி உள்ளதாக கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X