விஜயகாந்த் மீது வன்மத்தை கக்கினார்.. வடிவேலு வந்திருந்தா புரட்டி எடுத்திருப்பாங்க!
சென்னை: விஜயகாந்திற்கு வடிவேலு அஞ்சலி செலுத்த வந்து இருந்தால் நிச்சயம் மக்கள் அவரை புரட்டி போட்டு இருப்பார்கள் என்று பிஆர்ஓ ஒருவர் தெரிவித்துள்ளார்.
நடிகரும், தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்கோளாறு காரணமாக உயிரிழந்தார். இவரது உடலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் என பலர் தேமுதிக அலுவலகத்திலும், தீவுத்திடலிலும் வந்து விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். ஆனால், நகைச்சுவை நடிகர் வடிவேலு விஜயகாந்தின் உடலுக்கு மரியாதை செலுத்த வரவில்லை.

தன்னை வளர்த்துவிட்ட விஜயகாந்த் இறந்ததற்கே வரவில்லை என, இணையத்தில் இவர் குறித்து பல மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே இருக்கும் சண்டை குறித்து பிஆர்ஓ ஒருவர் விரிவாக தெரிவித்துள்ளார். அதில், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவிற்கு வடிவேலு அவர்கள் கண்டிப்பாக வந்து இருக்க வேண்டும். ஏன் என்றால் ஆரம்ப காலகட்டத்தில் வடிவேலுவிற்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது விஜயகாந்த் தான், சின்னக்கவுண்டர் படத்தில், அவருக்கு குடை பிடித்துக்கொண்டு இருக்கும்படி ஒரே ஒரு காட்சித்தான் படத்தில் வைக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்த் தான் நம்ம ஊரு பையன் நன்றாக வரட்டும் என்று, படம் முழுக்க வடிவேலு வரும்படி இயக்குநரிடம் பேசி அவருக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்திருந்தார். அதே போல பல படத்தில் வாய்ப்பு வாங்கி கொடுத்தது வடிவேலுதான்.
இங்குதான் பிரச்சனை ஆரம்பித்தது: இப்போது வடிவேலுவிற்கும் விஜயகாந்திற்கும் பிரச்சனை என்று செய்தி வருகிறது. இந்த பிரச்சனை ஆரம்பித்தது 2003ம் ஆண்டு சொக்கத்தங்கம் படத்தில் விஜயகாந்த் ஒப்பந்தம் ஆன போது, வடிவேலுவை விஜயகாந்த் ரெக்கமெண்ட் செய்கிறார். ஆனால், அந்த படத்தில் நடிக்க வடிவேலு பீக்கில் இருந்ததால் பெரிய தொகை கேட்கிறார் என்ற தகவல் விஜயகாந்திற்கு வந்ததும், வடிவேலுவிடம் நான் பேசுகிறேன் என்று விஜயகாந்த் கூறினார்.
இந்த நேரத்தில் தான் இருவரும் விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்டனர். அப்போது, விஜயகாந்த் வடிவேலுவிடம் சொக்கத்தங்கம் படத்தில் நான் நடிக்கிறேன். நீ சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொண்டு நடி என்று சொல்ல, கடுப்பான வடிவேலு, நான் உன்ன ஒரு படத்திற்கு ரெக்கமெண்ட் பண்றேன் நீ அந்த படத்தில் சம்பளத்தை குறைத்துக்கொண்டு நடி என்று சொல்லிவிட்டார். இதுதான் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட முக்கியமான காரணம்.
விஜயகாந்தை மோசமாக திட்டினார்: இந்த பிரச்சனைத் தான் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாகி 2011ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பெரிய அளவில் பிரச்சனையாகி விட்டது. வடிவேலு பிரச்சாரம் செய்த அனைத்து மேடையிலும் புதுசா கட்சி ஆரம்பித்தவன், குடிகாரன் என்று விஜயகாந்தை படுமோசமாக தாக்கிப்பேசினார். விஜயகாந்தை தாக்கி பேசுவதற்காகவே பிரச்சார மேடையை வடிவேலு பயன்படுத்திக்கொண்டார். அந்த அளவிற்கு அவர் வன்மத்தை மனதில் வைத்து இருந்தார். ஆனால், கேப்டன் விஜயகாந்தோ வடிவேலு பற்றி எந்த ஒரு இடத்திலும் தவறாக பேசியது இல்லை என்றார்.
ரசிகர்கள் புரட்டி இருப்பார்கள்: இதை விஜயகாந்த மறந்து மன்னித்து இருந்தாலும், ரசிகர்கள் மறந்து இருக்கமாட்டார்கள். வடிவேலு, விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தால் நிச்சயம் அவரை ரசிகர்கள் புரட்டி எடுத்து இருப்பார்கள். இதற்கு பயந்து கொண்டுதான் வடிவேலு வந்து இருக்க மாட்டார் என்று பிஆர்ஓ கோவிந்த ராஜ் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











