வனிதாவிற்கு 4வது கல்யாணம்.. மொய்யோட வாங்க.. வனிதா-ராபர்ட் போஸ்டர் பின்னணி இதுதான்?
சென்னை: சின்னத்திரை, வெள்ளித்திரை என அடுத்தடுத்த படத்தில் படுபிஸியாக இருக்கும் வைரல் ஸ்டார் நடிகை வனிதா விஜயகுமார், ராபர்ட் மாஸ்டருடன் கடற்கரையில் கை பிடித்துக்கொண்டு இருக்கும் போஸ்டர் வெளியாகி இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது. இதன் பின்னணி என்ன என்று பார்க்கலாம்.
விஜயகுமாரின் மகளான வனிதா, சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, மாணிக்கம், ஸ்ரீ தேவி என ஒரு சில திரைப்படத்தில் நடித்தார். அதன்பின், 2000-ம் ஆண்டு ஆகாஷ் என்பரை திருமணம் செய்துகொண்ட வனிதா கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். ஆனந்த் ஜெயராஜன் என்பரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவருடனும் சேர்ந்து வாழாமல் அவரையும் பிரிந்தார்.

வனிதா விஜயகுமார்: அதன்பிறகு, தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த வனிதா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். இதையடுத்து, 2020-ம் ஆண்டு பீட்டர் பால் என்பரை வனிதா 3-வது முறையாக திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணமான ஓரிரு மாதத்திலேயே அவரைவிட்டு பிரிந்தார்.பின் பீட்டர் பால் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
4 இல்ல, 40 கல்யாணம்: தற்போது, மகளுடன் தனியாக வசித்து வரும் வனிதா விஜயகுமார் சீரியல், படம், பிஸ்னஸ் என படுபிஸியாக இருக்கிறார். இவரும் பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் போட்டோ ஷூட் வெளியான போது, வனிதா பவர் ஸ்டாரை நான்காவதாக திருமணம் செய்யப்போகிறார் என்ற பேச்சு எழுந்தது. இதையடுத்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய வனிதா, நான்கு கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணிப்பேன் என்று பேசி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரலானது.

போஸ்டர் பின்னணி: தற்போது, வனிதா, ராபர்ட் மாஸ்டருடன் இருக்கும் போட்டோ வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த இணையவாசிகள், மீண்டும் கல்யாணமா என கேட்டு வருகின்றனர். ஆனால், இது உண்மையில், Mr&Mrs' படத்திற்கான போஸ்டர் என்றும், Save The Date' எனக் குறிப்பிட்டு வருகிற 5ஆம் தேதி இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்பதை மறைமுகமாக அறிவித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இன்று இணையத்தை கலக்கி வரும் வனிதா போஸ்டரின் பின்னணி இதுதான்.


Click it and Unblock the Notifications











