ஒரே கல்லில் ரெண்டு மாங்கா..நயன் – விக்கி ஜோடியின் மாஸ்டர் பிளான்.. அப்போ ஹனிமூன் இல்லையா?

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனியா நகரில் குதூகலமாக சுற்றி பார்த்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை விக்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.

இவர்கள் இருவரும் வெளிநாட்டுக்கு இரண்டாவது ஹனிமூன் சென்று இருப்பதாக பலரும் நினைத்து கொண்டு இருக்கும் நிலையில், அதற்கு பின்னணியில் வேறுஒரு காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

நயன்-விக்கி

நயன்-விக்கி

"தங்கமே உன்னத்தான் தேடி வந்தேன் நானே" என்ற பாட்டை பாடி நயன்தாராவை காதலில் விழவைத்த விக்னேஷ் சிவன். கடந்த ஜூன் மாதம் 9ந் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமான செட், திரும்பிய பக்கம் எல்லாம் பூக்களின் ரம்மியமான வாசனை என இவர்களது திருமணம் படுஜோராக நடந்தது. நெட்பிளிக்ஸ் இவர்களின் திருமண வீடியோ வெளியிடும் உரிமைத்தை வைத்துள்ளதால், விரைவில் திருமண வீடியோ வெளியாக உள்ளது.

ஹனிமூன்

ஹனிமூன்

திருமணம் முடிந்த கையோடு திருப்பதிக்கு சென்று நயன்தாரா வேண்டுதலை நிவர்த்தி செய்துவிட்டு பின்னர் தனது சொந்த ஊரான கேளராவிற்கு மறுவீட்டுக்கு சென்று தனது தாயை சந்தித்துவிட்டு அங்கிருந்து நேராக தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்றார். அங்கிருந்து அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் பல லைக்குகளை பெற்றது.

ஸ்பெயினில் நயன்தாரா

ஸ்பெயினில் நயன்தாரா

பின்னர் நாடு திரும்பிய நயன்தாரா அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதேபோல விக்னேஷ் சிவனும் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்குவதில் பிஸியானார். தற்போது இருவரும் ஓய்வாக இருப்பதால் விடுமுறையை ஸ்பெயினில் கொண்டாடி வருகின்றனர்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில் புது மணத்தம்பதியினர் தங்கள் ஹனிமூனை கொண்டாடி வருவதாகத்தான் பலரும் நினைத்து கொண்டு இருக்கும் நிலையில், இவர்கள் ஸ்பெயின் சென்றதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது. அதாவது, இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித்தை வைத்து ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

Recommended Video

மனைவி Nayanthara-வுடன் வெளிநாடு பறந்த Wikki...எங்கு தெரியுமா? *Kollywood
மாஸ்டர் பிளான்

மாஸ்டர் பிளான்

இதற்கு லோகேஷன் பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் ஜோடியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கல்யாணத்தையே வியாபாரமாக்கிய இந்த ஜோடி, தங்களது இரண்டாவது ஹனிமூனுக்கும் காரணத்தோடுதான் பிளான் போட்டு இருக்காங்க போல. இதுதான் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா என ரசிகர்கள் அவர்களை கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X