அமீர்கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக இதுதான் காரணம்..உண்மையை போட்டுடைத்த நாக சைதன்யா!

மும்பை : லால் சிங் சத்தா என்ற இந்திப் படத்தில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி விலகியதற்கான காரணம் குறித்து நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் அமீர் கான். பாலிவுட்டுக்கு மட்டுமே தெரிந்த முகமாக இருந்த இவர் தமிழ் ஆடியன்சுக்கு தெரியவைத்த திரைப்படம் தான் தங்கல்.

தற்போது அமீர் கான் அத்வைத் சந்தன் இயக்கத்தில் உருவாகி உள்ள லால் சிங் சத்தா என்ற நடித்துள்ளார். இத்திரைப்படம், வரும் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

அமீர் கான்

அமீர் கான்

அமீர் கான் நடிப்பில், ரங்கீலா, இஷ்க், லகான், ஃபனா, கஜினி, த்ரீ இடியட்ஸ், PK, தங்கல் போன்ற திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் கல்லாக்கட்டின. 2001ம் ஆண்டு வெளியான லகான், சிறந்த வேற்று மொழி திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் பட்டியலில் இடம் பெறவில்லை. சிறந்த திரைப்படத்திற்காக தேசிய விருதை லகான் கைப்பற்றியது.

லால் சிங் சத்தா

லால் சிங் சத்தா

2016ம் ஆண்டு தங்கல் திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக்குவித்தது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு, லால் சிங் சத்தா ஆகஸ்ட் 11ந் தேதி வெளியாக உள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியான ஃபாரெஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்குதான் லால் சிங் சத்தா. டாம் ஹாங்க்ஸ் நடித்த ஃபாரெஸ்ட் கம்ப் கதாபாத்திரத்தில் அமீர் கான் நடித்துள்ளார்.

கரீனா கபூர் ஜோடி

கரீனா கபூர் ஜோடி

இப்படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூரும், அம்மாவாக மோனா சிங் நடித்திருக்கிறார். நண்பராக நாக சைதன்யாவும் நடித்துள்ளார். இந்தப் படம் நாக சைதன்யாவின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். அத்வைத் சந்தன் இந்த படத்தை இயக்க, அமீர் கானே தனது சொந்த நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில், லால் சிங் சத்தா திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நாக சைதன்யா படம் குறித்து பல சுவாரசியமான கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, இப்படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்காக காரணம் குறித்து நாக சைதன்யாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிளித்த நாக சைத்தன்யா, எனக்கு தெரிந்த வரையில், அவர் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருவதால், தேதி பிரச்சினை ஏற்பட்டது. தேதி பிரச்சனையால் தான் விஜய்சேதுபதியால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.

வசதியாக இருந்தது

வசதியாக இருந்தது

மேலும், நானும், அந்த படத்தை பாதிக்காத வகையில், என்னுடைய கதாபாத்திரம், நான் எங்கிருந்து வந்தேன் என்பதை அடிப்படையாக கொண்டு மாற்றம் செய்யப்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பேசும் இளைஞனாகவும், இயற்கையாகவே இந்தியில் சில தெலுங்கு பேசும் சொற்கள் உள்ளதாலும், இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு மிகவும் வசதியாக இருந்தது என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X