Vijay: அந்த சம்பவத்துக்கு பிறகு சூர்யா விஜய் பக்கமே வரல.. செய்யாறு பாலு என்ன இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: நடிகர் விஜய்யுடன் சூர்யா பாக்ஸ் ஆபிஸில் போட்டி போடாமல் இருக்க காரணமே இதுதான் என செய்யாறு பாலு லேட்டஸ்ட் வீடியோவில் வெளியிட்டுள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் மேலும் மோதலை உருவாக்கி இருக்கிறது.
தொடர்ந்து சினிமாவில் நடக்கும் விஷயங்கள் என பலவற்றை பேசி வருகிறார் செய்யாறு பாலு. இந்நிலையில், நடிகர் சூர்யா விஜய்யுடன் மோதி தோற்றதால் தான் அதன் பின்னர் அவருடன் போட்டியாக தனது படங்களை பல வருடங்களாக வெளியிடவே இல்லை எனக் கூறியுள்ளார்.

நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் அஜித் நடிக்க மறுத்த நிலையில், சூர்யா அந்த படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பிரெண்ட்ஸ் படத்திலும் விஜய்யுடன் இணைந்து சூர்யா நடித்திருந்தார். இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வருவதற்கு உதாரணமே சூர்யாவின் அகரம் ஃபவுண்டேஷன் விளம்பர வீடியோவில் விஜய் நட்புக்காக நடித்திருந்தது எடுத்துக்காட்டாக அமைந்திருக்கும்.
தொழில் போட்டி: ஆனால், தொழில் போட்டி காரணமாக நடிகர் அஜித் மற்றும் விஜய் எப்படி தனித்து இருக்கின்றாரோ அதைப்போல நடிகர் விஜயின் சூர்யாவும் தனித்து செயல்பட்டு வருவதாக கூறுகின்றனர்.
சிங்கம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சூர்யா டாப் 3 நடிகர்களின் விஜய் அஜித்திற்கு பிறகு அடுத்த இடத்தை பிடித்திருந்தார். ஆனால் சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸில் நடிகர் சூர்யா சற்றே பின் தங்கியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸில் பின் தங்கியுள்ளார்: சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் திரைப்படங்கள் நேரடியாக தியேட்டரில் வெளியாகாததே இதற்கு காரணம் என்கின்றனர். கடைசியாக தியேட்டரில் வெளியான சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறமுடியாமல் தடுமாறியது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வீடியோ ஒன்றில் பேசிய செய்யாறு பாலு நடிகர் விஜய்க்கு போட்டியாக சில முறை மட்டுமே சூர்யா தனது படங்களை வெளியிட்டு வந்த நிலையில், கடைசியாக ஏழாம் அறிவு படத்தின் மேல் எக்கச்சக்க நம்பிக்கை கொண்டிருந்தார் சூர்யா. நடிகர் விஜயின் வேலாயுதம் படத்துடன் போட்டியாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்து இருந்தார்.
வேலாயுதம் vs 7ஆம் அறிவு: ஆரம்பத்தில் போதி தர்மர், ஏ ஆர் முருகதாஸ் இயக்கம் உள்ளிட்ட விஷயங்கள் அந்த படத்திற்கு நல்ல ஓப்பனிங் கொடுத்தாலும், நான்கு நாட்களுக்கு மேல் அந்த படம் சரிவை சந்திக்க ஆரம்பித்தது. நடிகர் விஜய்யின் வேலாயுதம் திரைப்படம் மீண்டும் பிக்கப் ஆக ஆரம்பித்த நிலையில், வசூலில் வேலாயுதம் திரைப்படம் தான் முன்னிலை வகித்தது.
ஒதுங்கிய சூர்யா: அதன் பின்னர், இனிமேல் நேரடியாக நடிகர் விஜய் படத்துடன் போட்டியிட வேண்டாம் என்கிற முடிவை நடிகர் சூர்யா எடுத்து விட்டதாகவும் பிறகு எந்த ஒரு படத்தையும் விஜய் படத்துடன் கிளாஸ் விடவில்லை என்றும் செய்யாறு பாலு கூறி உள்ளார்.
அவரது பேச்சைக் கேட்டு கடுப்பான சூர்யா ரசிகர்கள், அடுத்தாண்டு வெளியாக உள்ள சூர்யாவின் கங்குவா திரைப்படம் லியோ படத்தின் வசூலை எல்லாம் ஒரே வாரத்தில் வாரிசு சுருட்டி விடும் என பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், 7ம் ஆறிவு படத்தின் கதைக்கும் வேலாயுதம் கிரிஞ்ச் படத்தின் கதையையும் கம்பேர் பண்ணி காமெடி பண்ணாதீங்க என கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











