‘‘ஜவான்“படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதன் காரணம் இதுதானா?

சென்னை : அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தின் ஷூட்டிங் சென்னைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.

Recommended Video

Bollywood படங்கள் தொடர் தோல்வி ; சுஷாந்த் சிங் ஆவிதான் காரணமா?

நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் ஜவான். இந்தப் படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக ஷாருக்கான் நடிக்கிறார். பிரியா மணி, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இப்படத்தை ஷாருக்கன் மற்றும் அவரது மனைவி கௌரி கானின் ரெட் சில்லிஸ் எண்டெர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

ஷாருக்கான்

ஷாருக்கான்

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த திரைப்படங்களும் வெளியாகாததால் அவரின் படம் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். ஜவான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது.

5 மொழிகளில்

5 மொழிகளில்

அந்த டீசரில், ஷாருக்கான் முகத்தை பாதி மூடிய நிலையில் ரத்தக் காயங்களுடன் பழமையான இடத்தில் ஆக்ஷனுக்கு தயாராவது போன்ற டைட்டில் டீசர் வெளியாகி இருந்தது. அடுத்த ஆண்டு வருடம் ஜூன் 2-ம் தேதி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்திய படமாக இப்படம் வெளியாக உள்ளது.

சிறப்பு ரோலில்

சிறப்பு ரோலில்

இப்படத்தில், நயன்தாரா விசாரணை அதிகாரியாக நடிக்கிறார், அதே நேரத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மகனாக ஒரு கதாபாத்திரத்திலும் கேங் ஸ்டாராக மற்றொரு வேடத்திலும் ஷாருக்கான் நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், தீபிகா படுகோனே மற்றும் விஜய் கேமியோ ரோலில் நடித்து வருகின்றனர்.

400 கலைஞர்கள்

400 கலைஞர்கள்

ஜவான் படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யராம் ஸ்டுடியோவில் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் கலந்து கொண்ட நிலையில், படப்பிடிப்புக்காக மும்பையிலிருந்துசுமார் 400க்கும் மேற்பட்ட கலைஞர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு படப்பிடிப்பு பரபரப்புடன் நடந்து வருகிறது.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

இந்நிலையில் மும்பையில் நடந்த படப்பிடிப்பு சென்னைக்கு மாற்றப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மும்பையில் இப்போது பெருமழை பெய்து வருவதால் படப்பிடிப்பை சென்னைக்கு மாற்றியுள்ளார்களாம். ஏன் என்றால், விஜயின் பிகில் படம் முடிந்த பிறகு ஷாருக்கானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், படம் தாமதமாகிக் கொண்டே போவதால்,இனியும் படம் தாமதமாகக்கூடாது என அட்லி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X