Don't Miss!
- News
அந்த வீட்டுல என்னமோ நடக்குது.. ரெய்டில் காத்திருந்த ஷாக்.. வசமாக சிக்கிய அதிமுக மகளிரணி ‘புள்ளி’!
- Automobiles
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தனலட்சுமி...காரணம் இது தான்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தனலட்சுமி நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மக்கள் ஆதரவு இருந்த போதும் ஏன் வெளியேறினார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி பத்து வாரங்கள் முடிந்த நிலையில் 11வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இதுவரை 10 போட்டியாளர்கள் இருந்த வீட்டில் தனலட்சுமி வெளியேறியதை அடுத்து தற்போது ஒன்பது போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்கள்.
தற்போது தான் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது.
Good
Touch..
Bad
Touch
லாம்
வேணாம்..
Don't
Touch
தான்
ஒரே
தேர்வு..
பிக்
பாஸில்
கமல்
அதிரடி!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் வெள்ளை நிற சூட்கோட்டில் சும்மா மாஸாக வந்திருந்தார் கமல். போன வாரம் குழந்தைகள் டாஸ்க் எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது என்று கூறி,அமுதவாணன், விக்ரமன்,அசீம் ஆகியோரை குழந்தைப்போல பேசவைத்து அழகுபார்த்தார். இதிலும், அசீமை நைசாக கிண்டலடித்தார்.

அம்பேத்கருக்கு கடிதம்
மேலும், விக்ரமன் அம்பேத்கர் பற்றி கடிதம் எழுதி இருந்தார். இதுகுறித்து பேசிய கமல், இதுபோல நானும் மோகன் தாஸ் கரம்சந்த் காந்திக்கு கடிதம் எழுதினேன் என்று கூறி போட்டியாளர்களை மெய்சிலிர்க்க வைத்தார். இந்த கடிதத்தின் விளைவாகத்தான் ஹேராம் படத்தை எடுக்க ஊக்கப்படுத்தியதாக கூறி, தனது நினைவலைகளை மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

வெளியேறிய தனலட்சுமி
இதையடுத்து, பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றப்பட்டுள்ளதால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தனலட்சுமி வலுவான போட்டியாளர், டாப் லிட்டில் இடம் பிடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், தனலட்சுமி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதுதான் காரணம்
மக்களின் ஆதரவு அதிகம் இருந்த தனலட்சுமி அதிரடியாக வெளியேற்றியதற்கு என்ன காரணம் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.அதாவது இதுவரை தனலட்சுமி கொடுக்க வேண்டிய கன்டென்ட் எல்லாமே கொடுத்து விட்டார். பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் குடும்ப உறுப்பினர்கள் வருவார்கள். தனலட்சுமி தனது அம்மா பற்றி பல முறை பேசி இருக்கிறார். அதே போல, தனலட்சுமியின் அம்மாவும் தனலட்சுமி பற்றி பல யூடியூப் சேனல்களில் பேசி உள்ளதால், நிகழ்ச்சியில் சுவாரசியம் இருக்காது என்று அவரை வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. 76 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த தனலட்சுமிக்கு 11 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படடுள்ளதாக கூறப்படுகிறது.