பதற்றத்தில் ஷங்கர்… மகளின் திருமண வரவேற்பை நிறுத்த இதுதான் காரணம்!

சென்னை : இயக்குநர் ஷங்கரின் மருமகன் ஒரு புகாரில் சிக்கி உள்ளதால், மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்தி உள்ளார் ஷங்கர்.

ஷங்கர் மற்றும் ஈஸ்வரி தம்பதியினருக்கு ஐஸ்வர்யா ஷங்கர், அதிதி ஷங்கர், அர்ஜித் ஷங்கர் என இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

ஷங்கரின் இளைய மகள் அதிதி முத்தையா இயக்கி வரும் விருமன் என்ற படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருமணம்

கடந்த ஆண்டு திருமணம்

கோலிவுட்டில் பிரமாண்ட இயக்குநராக கொண்டாடப்படும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த ஜூன் 27ந் தேதி, மகாபலிபுரத்தில் பிரம்மாண்ட ரெசார்ட்டில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது.

நெருங்கிய உறவினர்கள்

நெருங்கிய உறவினர்கள்

இவர்கள் திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், கொரோனா பரவல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே அந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். திரைபிரபலங்கள் யாரும் கலந்து கொள்ள முடியாததால், சென்னையில் திருமண வரவேற்பு நடத்தப்படும் என ஷங்கர் அப்போதே கூறியிருந்தார்.

தடபுடலான ஏற்பாடு

தடபுடலான ஏற்பாடு

இயக்குனர் ஷங்கர் மே 1 ந் தேதி தனது மகளின் திருமண வரவேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தார். மேலும் இதற்காக பிரம்மாண்டமாக செட் போடப்பட்டு திருமணத்தை விட தடபுடலாக வரவேற்பு இருக்க வேண்டும் என ஏற்பாடு செய்து வந்தார். மேலும் 1500 பத்திரிகைகள் அடித்து திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுத்துவிட்டார்.

10 கோடி செலவு

10 கோடி செலவு

ஆனால், இயக்குநர் ஷங்கர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை திடீரென நிறுத்திவிட்டார். இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஷங்கர் கிட்டத்தட்ட 10 கோடிக்கு மேல் செலவு செய்திருந்த நிலையில், திடீரென ரிஷப்சனை நிறுத்தியதற்கான என்ன காரணம் என புரியாமல் ரசிகர்களும், பிரபலங்களும் குழம்பி இருந்தனர்.

Recommended Video

Vidharth, Prem kumar & Masoom Shankar | மாமன்னன் படத்துல Vidharth க்கு முக்கிய Role |Filmibeat Tamil
பதற்றத்தில் ஷங்கர்

பதற்றத்தில் ஷங்கர்

ஷங்கரின் மருமகனான ரோஹித் ஒரு புகாரில் சிக்கி உள்ளதாகவும், இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளதால்,ரோஹித் எந்த நேரத்திலும் சிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த புகார் காரணமாக ஷங்கரின் மகள் ஐஸ்வர்யா மற்றும் ரோஹித் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. இதனால், ஷங்கர் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X