நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டு.. தப்பு தப்பா எழுதினாங்க… நேர்காணலில் வருத்தப்பட்ட விஜய் !

சென்னை : நடிகர் விஜய் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கொடுத்துள்ள நேர்காணல் சன் தொலைக்காட்சியில் நேற்று ஒளிபரப்பானது.

இந்த இன்டர்வியூ பற்றிய புரமோக்கள் வெளியானதில் இருந்தே அனைவருக்கும் ஆர்வம் அதிகமாகி இன்று இணையத்தில், விஜய்யின் நேர்காணல் தான் டிராண்டிங்கில் உள்ளது.

இதில் 10 ஆண்டுகளாக எந்தவித இன்டர்வியூவும் கொடுக்காததற்கான காரணத்தை மனம் திறந்து கூறியுள்ளார் விஜய்.

பீஸ்ட்

பீஸ்ட்

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்துக்கு டிக்கெட் புக்கிங் மும்முரமாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படம் விஜய்க்கு முதல் பான் இந்தியா ரிலீஸ் படமாக அமையவுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யின் பீஸ்ட் படத்துக்குத் தணிக்கைக் குழு யுஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

பீஸ்ட் 13ந் தேதி ரிலீஸ்

பீஸ்ட் 13ந் தேதி ரிலீஸ்

பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதை அதன் ப்ரமோஷனுக்காக விஜய் தற்போது சன் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் என்ற நேர்காணல் நிகழ்ச்சியைக் கொடுத்துள்ளார். இது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, நடிகர் விஜய் அளிக்கும் பேட்டி ஆகும். இந்த நேர்காணலை படத்தின் இயக்குனர் நெல்சனே எடுத்துள்ளார்

தப்பு தப்பா எழுதினாங்க

தப்பு தப்பா எழுதினாங்க

இந்நிலையில், இந்த நேர்காணலில், 10 ஆண்டுகளாக ஏன் எந்தவித இன்டர்வியூவும் கொடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் நான் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, பத்திரிக்கையில் தப்பு தப்பாக எழுதினார்கள். இதனால் நான் இதுநாள் வரை இன்டர்வியூ கொடுக்காமல் இருந்து வந்தேன் என்று விஜய் கூறியுள்ளார்.

பல சுவாரசியத் தகவல்

பல சுவாரசியத் தகவல்

இந்த நேர்காணலில் நெல்சன் விஜய்யிடம் சிரித்துக்கொண்ட பல கேள்விகளை கேட்டார். அதில், தனது மகள் சஞ்சய் எப்பொழுது நடிக்க வருவார் என்பது தொடங்கி, நான் எப்போது அரசியலுக்கு வருவேன் என்பது வரை விஜய் பல சுவாரசியமானத் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X