விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!

சென்னை: அண்மைக்காலமாக கருங்காலி மாலையை அனைவரும் அணிந்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ், தனுஷ் போன்ற பிரபலங்கள் கருங்காலி மாலைகளை அணிய துவங்கியதுதான் இதற்கு முக்கிய காரணம். கோடம்பாக்கம், சாலிகிராமம் பக்கம் போனால் சினிமா துறையில் இருக்கும் பலரும் இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது. தற்போது, லோகேஷ் கனகராஜ் கருங்காலி மாலையை அணிந்ததற்கான காரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் டாப் இயக்குநரான லோகேஷ் கனகராஜ், மாநகரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார். இவர், கைதி, விக்ரம், லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர். தற்போது, ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து இனிமேல் ஆல்பம் பாடலில் நடித்துள்ளார். அந்த பாடலில் ஓவர் ரொமான்ஸ் செய்தது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

This is the reason why Lokesh Kanagaraj wearing karungali malai

ரொமான்சே அவருக்கு வராது என ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், ஆல்பம் பாட்டில் மட்டும் ஹீரோயினை கொஞ்சுவது நியாயமா என ரசிகர்கள் கேள்வி கேட்டு இணையத்தை தெறிக்கவிட்டனர். அது மட்டுமில்லாமல் விக்ரம் படத்தில் நடித்த காயத்ரி உங்க படத்துல ரொமான்ஸ் பண்ணா தலையை வெட்டிட்டு.. என்னம்மா இதெல்லாம்? என நகைச்சுவையாக கேட்டு இருந்தார்.

லோகேஷ் கனகராஜ் பதில்: இதையடுத்து வெளியான ஆல்பம் பாடலில், புரிந்து கொள்ளும் தன்மை இல்லாமல் திருமணம் செய்து கொள்பவர்கள் எப்படி தங்களின் உறவை சமாளிக்கின்றனர் என்பது தான் இந்த பாடலின் மையக்கருவாக இருந்தது. பாடல் வெளியீட்டு விழாவில், லோகேஷ் கனகராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசனுடன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில் பல கேள்விகளுக்கு பதிலளித்த அவரிடம். கருங்காலி மாலை அணிந்தது குறித்த கேள்விக்கு எழுப்பட்டது.

காரணம் இதுதான்: இதற்கு பதில் அளித்த அவர், விக்ரம் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்த போது, விக்ரம் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினேன். அப்போது என் நண்பர் கலை இயக்குனர் சதீஷ் கருங்காலி மாலையை வாங்கிக் கொடுத்து இதை அணிந்து கொள்ளுங்கள் என்றார். நண்பன் ஆசையாக கொடுத்தது என்பதால் அணிந்திருப்பதாகவும் மற்றபடி அதன் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியுள்ளார்.

ரஜினி 171: லோகேஷ் கனகராஜ் தற்போது, நடிகர் ரஜினிகாந்தை வைத்து து 171வது படத்தை இயக்குகிறார். இந்த படத்திற்கான கதை எழுதும் வேலைகளில் லோகி இறங்கியிருக்கிறார். இதற்காக அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகியிருக்கிறார். இப்படத்தின் போஸ்டர் நேற்று வெளியானது. அதில், ரஜினிகாந்த், கையில் கோல்டு கலர் கடிகாரங்கங்கள் செயினைப்போல பின்னப்பட்டு உள்ளன. இந்த போஸ்டரில் நேரம் காட்டும் கருவி, கடிகாரம் இருப்பதால், இப்படம் லோகேஷின் நீண்ட நாள் கனவான இரும்புக் கை மாயாவி படமா? அல்லது டைம் ட்ராவல் படமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X