வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம்.. சினிமா, அரசியல் எதுவும் வேண்டாம்.. நெப்போலியன் எடுத்த முடிவு!

சென்னை: சினிமா அரசியல் என இரண்டிலும் படு பிஸியாக இருந்த நடிகர் நெப்போலியன், தனது வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவத்திற்கு பிறகு இரண்டிலும் இருந்து ஒதுக்கி இருக்கிறார்.

திருச்சியை பூர்வீகமாக கொண்ட நெப்போலியனுக்கு சினிமா மீதும் நடிப்பு மீதும் இருந்த ஆர்வத்தால், சினிமா வாய்ப்புத் தேடி சென்னை வந்தார். இதையடுத்து அவருக்கு இயக்குநர் பாரதிராஜா புது நெல்லு புது நாத்து படத்தில் அவரை வில்லனாக அறிமுகப்படுத்தினார். அந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்று நெப்போலியனுக்கு சினிமாவில் நல்ல ஒரு இடம் கிடைத்தது. இதைத் தொடர்ந்து வில்லன் ரோலில் நடித்து வந்த நெப்போலியன் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசா படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்த படம் வரவேற்பை பெற்றன.

This is the reason why Napoleon settled in America

இதையடுத்து வில்லன், ஹீரோ மாறி மாறி நடித்து வந்த நெப்போலியனுக்கு சினிமாவில் குறுகிய காலத்திலேயே நல்ல பெயர் கிடைத்தது. இதையடுத்து, 2001ம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் நடந்த பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாகவும் பதவி வகித்து வந்த நெப்போலியன், திடீரென சினிமா, அரசியல் இரண்டிலிருந்தும் விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அவரது மூத்த மகன் தனுஷுக்கு தசை அலர்ச்சி நோய் பாதிக்கப்பட்டு இருந்ததால், அவரின் சிகிச்சைக்காக அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்.

நடிகர் நெப்போலியனின் பிரம்மாண்ட வீடு: அமெரிக்காவில் பிரம்மாண்டமான வீட்டை கட்டிவைத்துள்ள நெப்போலியன் தனது மகனுக்காகவே வீட்டைப் பார்த்து பார்த்து கட்டி உள்ளார். கடந்த மாதம் நெப்போலியனின் 60வது பிறந்தநாள் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில், நடிகை குஷ்பூவும் நடிகை மீனாவும் கலந்து கொண்டு நெப்போலியனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவம்: இந்நிலையில் சினிமா, அரசியல் என இரண்டிலும் படு பிஸியாக இருந்த நெப்போலியன் இரண்டையும் ஒதுக்கிவைத்துவிட்டு ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் ஐடி நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்த ஐடி நிறுவனம் சென்னை மற்றும் அமெரிக்கா என இரு இடங்களிலும் செயல்பட்டு வருகிறது. அவ்வளவு பிஸியாக இருந்த நெப்போலியன் எதுவுமே வேண்டாம் என இருப்பதற்கு காரணம் மகன் கேட்ட அந்த கேள்விதான் என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுதான் காரணம்: அதாவது, நெப்போலியன் தனது மகன் தனுஷின் உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் மகனுக்கு சிகிச்சை செய்து வருகிறார். ஒரு முறை அமெரிக்க சென்ற போது அவரது மகன் தனுஷ், அப்பா இனிமேலும் நான் இப்படி தனியா தான் இருக்கணுமா, அப்பா இல்லாமல் இருக்கணுமா என்று கேட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பிறகுதான் நெப்போலியன் இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு அமெரிக்காவில் செட்டி ஆகியதாக நெப்போலியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X