பிறந்த நாளில் ரஜினி வாழ்வில் நடந்த துயர சம்பவம்.. யாருக்கும் தெரியாத ரகசியம்!

சென்னை: டிசம்பர் 12ந் தேதி ரஜினி பிறந்த நாளில் நடந்த துயரமான சம்பவம் குறித்து செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 73வது பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

This is the reason why Rajinikanth did not meet his fans on his birthday, said cheyyaru balu

சோஷியல் மீடியாவில் #HDBRajinikanth நேற்று மிகப்பெரிய அளவில் பிரபலமானது. இவருக்கு பல நடிகர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்: ஸ்டைலு ஸ்டைலு தான்… இது சூப்பர் ஸ்டைலுதான் என்று இன்று ஸ்டைல் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது தனித்துவமான ஸ்டைலால் வளைத்துப்போட்டவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தை பார்த்த இன்றைய 2கே இளசுகளும், ரஜினியின் ஸ்டைலைப்பார்த்து வியந்து போனார்கள்.

வேட்டையன்: தற்போது ரஜினிகாந்த், ஞானவேல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு வேட்டையன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. பிறந்த நாளை முன்னிட்டு வெளியான இந்த டீசர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

எங்கள் குல சாமியே: ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று ரசிகர்கள் எப்படியாவது சந்தித்து ஒரு வாழ்த்து சொல்லி விட வேண்டும் என அவரது வீட்டிற்கு முன் காத்து கிடந்தனர். தலைவா ஒருமுறை வந்து முகத்தை காட்டுங்கள் என்றும் எங்கள் குல சாமியே என்றும், நாங்கள் வழிபடும் சிவனே, சிவாஜி ராவே என்றும் ரசிகர்கள் அவரை பார்க்க காத்திருந்த நிலையில், அவர் வீட்டில் இல்லாததால், ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

செய்யாறு பாலு: இதுகுறித்து செய்யாறு பாலு யூடியூடிப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ரஜினி ஒரு காலத்தில் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சந்தித்து வந்தார். அதன் பிறகு அவரின் பிறந்த நாளுக்கு முன்பாக பத்திரிக்கையில் நாளை ரஜினிகாந்த் இமயமலை பயணம். இதனால், ரசிகர்கள் யாரும் வீட்டுக்கு வரவேண்டாம் என்று ஒரு அறிவிப்பு வரும்.

துயரமான சம்பளம்: இதற்கு காரணம், 80 காலகட்டத்தில் ஒரு பிறந்த நாளில் ரஜினி ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது, அவரை சந்தித்துவிட்டு சென்ற 3 ரசிகர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்கள். 3 பேரை பறிகொடுத்த அவர்களின் தாயார் கேட்ட கேள்வி என் காதிலேயே இருக்கிறது, இதனால் தான் என் பிறந்த நாளில் நான் ரசிகர்களை சந்திப்பது இல்லை என்று ரஜினி ஒரு நிகழ்ச்சியில் சொல்லி இருந்தார் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X