Rajinikanth - சீக்ரெட் மீட்டிங்குக்காகத்தான் மாலத்தீவு போனாரா ரஜினி?.. பரபரக்கும் தகவல்

சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) நடிகர் ரஜினிகாந்த் சீக்ரெட் மீட்டிங் ஒன்றுக்காகத்தான் மாலத்தீவு சென்றதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது மகள் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். வரிசையாக இரண்டு தோல்வி படங்களை கொடுத்திருக்கும் அவர் ஜெயிலர் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். அதேபோல் லால் சலாம் படத்தில் அவர் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டாலும் ரஜினிக்கு உரிய முக்கியத்துவம் இருக்கும் என்று அவரது ரசிகர்களால் நம்பப்படுகிறது.

This is the reason why Rajinikanth Went To Maldives

அடுத்த படங்கள்: ரஜினிகாந்த் அடுத்ததாக ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து அந்தப் படம் உருவாகும் என கூறப்படுகிறது. அதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

டூர் சென்ற ரஜினி: வரிசையாக படங்களில் கமிட்டாகியிருப்பதால் குட்டி ரெஸ்ட் எடுப்பதற்காக ரஜினிகாந்த் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றார். அங்கு கடற்கரையில் ரிலாக்ஸாக அவர் வாக் செய்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டானது. இந்தச் சூழலில் இன்று அவர் அங்கிருந்து சென்னை திரும்பினார். விமானத்துக்குள் ரசிகர்களுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட அவர் சென்னை விமான நிலையத்தில் யாருடனும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

This is the reason why Rajinikanth Went To Maldives

என்ன காரணம்?: இந்நிலையில் ரஜினிகாந்த் ஓய்வு எடுப்பதற்காகத்தான் மாலத்தீவு சென்றார் என கூறப்பட்ட சூழலில் தற்போது அது தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி தனது மகள் ஐஸ்வர்யாவும், தனுஷும் பிரிந்திருப்பதை ரஜினியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். அவர்களுக்காக இல்லையென்றாலும் இரண்டு மகன்களுக்காக மீண்டும் அவர்கள் சேர வேண்டும் என நினைக்கிறாராம்.

சீக்ரெட் மீட்டிங்?: அதற்கான முயற்சியாக இருவரையும் மாலத்தீவுக்கு அழைத்து யாருக்கும் தெரியாமல் சீக்ரெட்டாக பேசி பிரச்னையை சுமூகமாக்கலாம் என்ற முடிவில்தான் அவர் சென்றாராம். ஆனால் தனுஷோ, ஐஸ்வர்யாவோ இங்கு பிஸியாக இருப்பதால் அங்கு செல்லவில்லையாம். இதனால் ரஜினிகாந்த் கொஞ்சம் அப்செட் ஆகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்தத் தகவல் தற்போது கோலிவுட்டில் தீயாக பரவிவருகிறது. அதேசமயம் இந்த தகவலில் துளிக்கூட உண்மையில்லை ரஜினி முழுக்க முழுக்க ஓய்வுக்காக மட்டும்தான் சென்றார் என்கின்றனர் ரஜினியின் ஆதரவாளர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X