Ramarajan: சத்தியத்தை மீறிய நளினி.. விவாகரத்துக்கு காரணம் இதுதான்.. மனம் திறந்த ராமராஜன்!

சென்னை: தமிழ் சினிமாவில்,ரஜினிகாந்த். கமல்ஹாசன் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன். மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பின் தெருவிளக்கு, சிவப்பு மல்லி, சட்டத்தை திருத்துங்கள் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த ராமராஜன் நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக மாறினார்.

அதன்பின் எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு ராசா என கிராமத்து பின்னணி கதைகளை கொண்ட படத்தில் நடித்து வெற்றி விழா நாயகனாக வளம் வந்தார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு தியேட்டரில் ஒரு வருடம் ஓடி சாதனையும் படைத்துள்ளது.

Ramarajan Nalini divorce

ராமராஜன்: இப்படி கொடி கட்டி பறந்து கொண்டு இருந்த ராமராஜன், 80ஸ் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்த நளினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அருண் மற்றும் அருணா என இரண்டு குழந்தைகள் இருக்கும் போது இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து இருவரும் பரஸ்பர புரிதலோடு பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துவந்தாலும், தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோராகவே இருந்தனர். மகன் அருண் மற்றும் அருணா திருமணத்தில் ராமராஜன் கலந்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகிய நளினி, ராமராஜனை விவாகரத்து செய்து பின் சினிமா மற்றும் சீரியல்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

நடிக்கக்கூடாது : இந்நிலையில், நடிகர் ராமராஜன் விவாகரத்து குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், என்னுடைய தந்தை ஒரு நாடக கலைஞர், ராஜபாட் ராமைய்யா என்றால் அனைவருக்கும் தெரியும்.என் அப்பா, என் அம்மாவை பெண் பார்க்க சென்றபோது பெண் வீட்டார் வைத்த ஒரே கோரிக்கை, திருமணத்திற்கு பிறகு மாப்பிள்ளை நடிக்க கூடாது என்பதுதான். என்னுடைய அப்பாவுக்கு அம்மாவை பிடித்து விட்டதால், இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார். அதன் பிறகு, பல்வேறு வேலைகளை செய்து எங்களுடைய குடும்பத்தை பார்த்துக்கொண்டார். இதுதான், பின் நாளில் என் வாழ்க்கையிலும் நடந்தது, நான் திருமணம் செய்து கொள்ளும்போது வைத்த முதல் கோரிக்கை நடிக்க கூடாது என்பதுதான்.

சத்தியம் செய்த நளினி: நான் ரிக்ஷா இழுத்துக்கூட காப்பாற்றுவேன். ஆனால் சினிமாவில் நடிக்க கூடாது என்று நளினியிடம் தெளிவாக கூறிவிட்டுத்தான் திருமணம் செய்தேன். அப்போது நடிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அன்றே இல்லை நான் நடிப்பேன் என்று சொல்லி இருந்தால், திருமணம் செய்து இருக்க மாட்டேன். மீண்டும் நடிப்பேன் என்று சொன்ன போது தான் பிரச்சனையே வந்தது. நளினி மீண்டும் நடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதனால், இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டோம். அந்த கோவம் மனதில் இன்றும் இருக்கு, இருந்தாலும் மகன் மகள் திருமணத்திற்கு அழைத்தார்கள் அதற்கு, அப்பாவாக சென்றேன். ஆனால், இப்போது வரைக்கும் நான் நளினியுடன் பேசுவது இல்லை. மகன், மகளுடன் மட்டும்தான் பேசுவென் என்று விவாகரத்திற்கான காரணத்தை நடிகர் ராமராஜன் மனம் திறந்து பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X