விஜய்யுடன் நடிக்க மறுத்த ராஷ்மிகா… அந்த நடிகர் தான் காரணம்!

சென்னை : நடிகை ராஷ்மிகா மந்தனா தளபதி 66 திரைப்படத்தில் நடிக்க மறுத்ததற்கு அந்த நடிகர் தான் காரணம் என கூறப்படுகிறது.

தமிழ் ரசிகர்களுக்கு கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா

தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், தமிழ் ஆகிய மொழி படங்களில் கலக்கி கொண்டு வருகிறார்.

ராஷ்மிகா

ராஷ்மிகா

நேஷ்னல் க்ரஷ் நடிகை என பெயர் எடுத்த ராஷ்மிகா மந்தனாவுக்கு ஏராளமான இளசுகளின் ஆதரவு உள்ளது. டோலிவுட் , பாலிவுட்டில் முன்னணி நடிகை என பெயர் எடுத்துள்ள இவர். சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியில் மாஸ் காட்டிய நிலையில் இவருடைய மார்க்கெட்டும் ஏகிறிவிட்டது.

பீஸ்ட்

பீஸ்ட்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதியின் 65ஆவது படமான பீஸ்ட் படத்தில் ராஷ்மிகா மந்தனா தான் முதலில் தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் கால்ஷீட் இல்லாததால், அந்த வாய்ப்பு புட்டபொம்மா புகழ் பூஜா ஹெக்டேவுக்கு கிடைத்தது. இயக்குநர் செல்வராகவன் வில்லனாக நடித்துள்ளார். இத்திரைப்படம் ஏப்ரல் 13ந் தேதி வெளியாக உள்ளது.

தளபதி 66

தளபதி 66

விஜய்யின் 66வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்க உள்ளார். இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான தோழா படத்தை இயக்கியவர் ஆவார். மேலும் இப்படத்தை டோலிவுட்டை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார்.

ராஷ்மிகா நிராகரித்தார்

ராஷ்மிகா நிராகரித்தார்

இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷின் பெயர் அடிப்பட்ட நிலையில் அது பொய்யான தகவல் என தெரியவந்தது. அதன் பின்னர் ராஷ்மிகா தளபதி 66 திரைப்படத்தில் நடிப்பார் என தகவல்கள் பரவிய நிலையில், விஜய்யுடன் இணைந்து நடிக்க ராஷ்மிகா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்த நடிகர் தான் காரணம்

அந்த நடிகர் தான் காரணம்

பாலிவிட்டில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா ரன்பூர் கபூருடன் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகவும் இதனால் தான், தளபதி 66 திரைப்படத்தை அவர் நிராகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தானாக தேடி வந்த வாய்ப்பை, ரன்பூர் கபூருக்காக ராஷ்மிகா நிராகரித்துவிட்டதால் தமிழ் ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X