சூர்யா கீழடிக்கு வந்ததற்கு காரணமே இதுதான்.. உண்மையை புட்டு புட்டு வைத்த பயில்வான் ரங்கநாதன்!

சென்னை : நடிகர் சூர்யா கீழடிக்கு குடும்பத்தோடு சென்றது சர்ச்சைக்குள்ளான நிலையில் பயில்வான் ரங்கநாதன், சூர்யா கீழடிக்கு வந்ததற்கான காரணத்தை புட்டுபுட்டு வைத்துள்ளார்.

ஏப்ரல் 1ந் தேதி கீழடியில் அமைந்துள்ள கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா, ஜோதிகா, அவர்களின் குழந்தைகள், சிவக்குமார் ஆகியோர் குடும்பத்தோடு பார்வையிட்டனர்.

வழக்கமாக காலை 10 மணிக்கு டிக்கெட் வழங்கப்பட்டு பார்வையாளர்கள் அருங்காட்சியகத்திற்குள் அனுமதிக்கப்படுவது அங்கு வழக்கமாக உள்ளது.

கீழடியில் சூர்யாவின் குடும்பம்

கீழடியில் சூர்யாவின் குடும்பம்

நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் ஏப்ரல் 1ந் தேதி 9 மணிக்கு கீழடிக்கு வந்து விட்டதால், 9 மணிக்கே அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. அவர்களுடன் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசனும் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள பழங்கால பொருட்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் கொடுத்தார்.

விதியை மீறிவிட்டார்

விதியை மீறிவிட்டார்

அருங்காட்சியகத்திற்குள் சூர்யாவின் குடும்பத்தினர் இருந்ததால், பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கால் கடுக்க கொளுத்தும் வெயிலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, சூர்யாவை பொதுமக்கள் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், சூர்யா விதிமுறையை மீறிவிட்டதாக கூறி மதுரை பாஜகவினர் சூர்யா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்துள்ளனர்.

டிக்கெட் வாங்கவில்லை

டிக்கெட் வாங்கவில்லை

இவ்விவகாரம் குறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பேசி உள்ள பயில்வான் ரங்கநாதன், கீழடி அருங்காட்சியகத்திற்குள் செல்ல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேஷன் உடன் இருந்ததால் யாருமே கட்டணமே எடுக்கவில்லை. அந்த பகுதியை சுற்றிப்பார்க்க இரண்டு மணி நேரத்திற்கும் மேல் ஆனதால், அப்பகுதிக்கு வந்த மக்கள் பல மணி நேரம் வெயிலில் காத்திருந்தார்கள்.

வந்ததற்கு காரணமே இதுதான்

வந்ததற்கு காரணமே இதுதான்

ஆனால், சூர்யா தன்னுடைய அவப்பெயரை மாற்றிக்கொள்வதற்காகத்தான் கீழடிக்கு அவர் வந்தார் என்று பரவலாக பேசப்படுகிறது. சூர்யா தனது குடும்பத்துடன் மும்பையில் குடும்பத்தோடு குடியேறிவிட்டார். இப்போது மும்பையில் தான் தனது குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். இதனால் ரசிகர்களும், இயக்குநர்களும் சூர்யா மும்பையில் செட்டிலாகிவிட்டார். இனி தமிழ் படங்களில் நடிக்க மாட்டார் என்று எழுந்த அவப்பெயரை அழிப்பதற்காகத்தான் அப்பா, அம்மாவை கீழடிக்கு அழைத்து வந்துள்ளார்.

விளாசிய பயில்வான் ரங்கநாதன்

விளாசிய பயில்வான் ரங்கநாதன்

யாருக்குமே தெரியாமல் ரகசியமாக கீழடிக்கு சூர்யா வந்தது எம்பி வெங்கடேஷனுக்கு மட்டும் எப்படி தெரிந்தது. அது மட்டுமில்லாமல் அங்கு அத்தனை மாணவர்கள் வெயிலில் நிற்பது தெரிந்தும் நீங்கள் எந்தவிதமான ஆட்சேபனையும் தெரிவிக்காதது ஏன் என பயில்வான் ரங்கநாதன் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X