கொஞ்சம் பிளாஷ்பேக்.. நடிகர் சூர்யா நிராகரித்த அந்த காதல் படம்.. தனுஷ் நடிப்பில் சூப்பர் ஹிட்!

By

சென்னை: நடிகர் சூர்யா நிராகரித்த படத்தில் தனுஷ் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

Recommended Video

Surya Soorarai Pottru OTT Release | பின்னணி என்ன?

சினிமாவில் நாம் நினைத்தபடி எதுவும் நடந்துவிடாது. முதலில், ஒன்றாக இருக்கும் விஷயங்கள் பிறகு அப்படியே தலைகீழாக மாறும்.

இந்த கதையில் இவர் நடித்தால் நன்றாக இருக்கும் நினைத்து கதை சொல்லப் போனால், அந்த ஹீரோ நிராகரிப்பார்.

சினிமாவில் சகஜம்

சினிமாவில் சகஜம்

அதற்கு அவர்கள் சொல்லும் காரணமும் பெரிதாக இருக்காது. இது சினிமாவில் சகஜம்தான். ரஜினிகாந்த், கமல்ஹாசனில் இருந்து விஜய், அஜித்குமார் வரை பல டாப் ஹீரோக்கள், ஏதோ காரணங்களுக்காக நிராகரித்த பல படங்கள் மற்ற ஹீரோக்கள் நடித்து சூப்பர் ஹிட்டான சம்பவங்கள் தமிழ் சினிமாவில் அதிகம். இது எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்திலேயே நடந்திருக்கிறது.

கமர்சியல் கில்லி

கமர்சியல் கில்லி

அப்படி அஜித் நிராகரித்த சில படங்களில் நடித்துள்ள நடிகர் சூர்யாவும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை நிராகரித்திருக்கிறார். அது தனுஷ் நடித்த திருடா திருடி. துள்ளுவதோ இளமையில் அறிமுகமான தனுஷ், அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் படத்தில் நடித்தார். இரண்டு படங்களும் ஹிட். இதையடுத்து அவர் நடித்த படம், திருடா திருடி. ஒல்லி தனுஷை கமர்சியல் கில்லியாக மாற்றிய படங்களில் இதுவும் ஒன்று.

மன்மத ராசா பாடல்

மன்மத ராசா பாடல்

2003-ல் வெளிவந்த இந்தப் படத்தை சுப்பிரமணியம் சிவா இயக்கியிருந்தார். இதில் தனுஷ் ஜோடியாக சாயா சிங் நடித்திருந்தார். மாணிக்க விநாயகம், கருணாஸ், கிருஷ்ணா, டெல்லி கணேஷ் உள்பட பலர் நடித்திருந்தனர். தினா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடல் அப்போது வைரல் ஹிட்டானது. வண்டார்குழலி உள்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்.

சுப்ரமணிய சிவா

சுப்ரமணிய சிவா

இந்தப் படம் வெளியாகி இத்தனை வருடம் ஆனாலும் இதன் பாடல்களும் காட்சிகளும் இப்போது வரை தனுஷ் ரசிகர்களால் பேசப்பட்டு வருகின்றன. திடீர் திடீரென இணையதளத்தில் வைரலாகின்றன. இந்தப் படத்தை தெலுங்கில் தொங்கா தொங்கடி என்ற பெயரில் ரீமேக் செய்தார், சுப்ரமணிய சிவா. அங்கு தனுஷ் கேரக்டரில் மோகன்பாபு மகன் மனோஜ் மஞ்சு நடிக்க, சாயா சிங் கேரக்டரில் சதா நடித்தார்.

நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா

இந்தப் படத்தை இயக்குனர் சுப்ரமணிய சிவா, முதலில் சூர்யாவிடம்தான் கூறியிருக்கிறார். 'அப்ப எடிட்டர் சுரேஷ் அர்ஸ் சொல்லிவிட்டு, நடிகர் சூர்யாவை பார்த்தேன். அவர் அப்போது பாலாவின் 'நந்தா' படத்தில் நடித்திருந்தார். திருடா திருடி கதையை சொன்னேன். இந்தக் கதையை கேட்டதும் ஜாலியாக ரசித்தார். நன்றாக இருக்கிறது என்றார்,

சீரியசான படங்கள்

சீரியசான படங்கள்

பிறகு, நான் இப்போதுதான் கொஞ்சம் சீரியசான படங்களில் நடித்து வருகிறேன். அதனால் இந்த கதையில் நடிக்கவா, வேண்டாமா என்று குழப்பமாக இருக்கிறது என்று யோசித்தார். பிறகு சரி என்று வந்து விட்டேன். பிறகுதான் அது தனுஷூக்கு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். அவரிடம் சொன்னேன். ஒர்க் அவுட் ஆனது' என்றார் இயக்குனர் சுப்ரமணிய சிவா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X