ஆரம்பமே இப்படியா..? மீண்டும் தள்ளிப் போன டாப் ஹீரோ பட ஷூட்டிங்.. அந்தப் பயம்தான் காரணமாமே!

By

சென்னை: மீண்டும் தொடங்குவதாக இருந்த உச்ச நடிகர் படம் தள்ளிப் போனதற்கு அந்த பிரச்னைதான் காரணம் என்கிறார்கள் சினிமாவில்.

உச்ச நடிகர் அந்த மரியாதைக்குரிய படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து ஷூட்டிங் தொடங்கப்பட்டது, அமர்க்களமாக.

நட்சத்திரப் பட்டாளம்

நட்சத்திரப் பட்டாளம்

படத்தில் நம்பர் நடிகையில் இருந்து சில முன்னாள் ஹீரோயின்கள், இளம் ஹீரோயின் வரை ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம். மொத்த பேரும் ஸ்பாட்டில் இருந்தால், ஏதோ கல்யாண வீட்டில் இருப்பதுபோல இருக்கும் என்றார்கள். ஸ்டார் காஸ்ட்டே படத்துக்கு அவ்வளவு அமர்க்களமாக இருந்தது.

கொடூர வைரஸ்

கொடூர வைரஸ்

இதன் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தபோதுதான் சீனாவில் இருந்து வந்து சேர்ந்தது, கொரோனா என்கிற கொடூர வைரஸ். மொத்த மனித குலத்துக்கும் இந்த வைரஸ் விட்ட சவாலில் ஆடிப்போயிருக்கிறது, உலகம். இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் போய் கொண்டு இருக்கின்றன.

ஷூட்டிங் அனுமதி

ஷூட்டிங் அனுமதி

கொரோனாவால் பல படங்களின் ஷூட்டிங் மொத்தமாக ரத்தாக, உச்ச ஹீரோ பட ஷூட்டிங்கும் நின்றது. ஏழு மாதங்களுக்குப் பிறகு குறைவான நபர்களை வைத்து ஷூட்டிங்கை தொடங்கலாம் என்று அனுமதி அளித்திருக்கிறது அரசு.

பிரமாண்ட செட்

பிரமாண்ட செட்

இதனால் சில படங்களின் ஷூட்டிங் தொடங்கி இருக்கிறது. அதைப் போல, உச்ச நடிகர் படத்தின் ஷூட்டிங்கையும் தொடங்கத் திட்டமிட்டனர். இதற்காக ஐதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்க வேலைகள் தொடங்கின. இன்னும் 40 நாள் ஷூட்டிங் பாக்கி. ஒரே கட்டமாக படத்தை முடிக்க திட்டம்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்த திட்டத்தில்தான் கொரோனா மேலும் கொக்கிப் போட்டு இழுத்திருக்கிறது. அதாவது படத்துக்காக செட் வேலையை ஆரம்பித்த அன்றே, அதில் பணியாற்றிய மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு வந்துவிட்டதாம். இந்த தகவல் உச்ச நடிகருக்கு வந்திருக்கிறது. அப்செட்டான அவர் படக்குழுவிடம் பேசினார்.

உடல்நிலை முக்கியம்

உடல்நிலை முக்கியம்

என்ன ஆரம்பமே இப்படி இருக்கு? என்னால இப்ப வரமுடியாது, கொஞ்சம் வெயிட் பண்ணுவோமே? என்று சொல்லிவிட்டாராம். அவர் உடல்நிலை முக்கியம் என்பதால் படக்குழுவும் அதற்கு ஓகே சொல்லிவிட்டது. ஷூட்டிங்கை மீண்டும் தள்ளி வைத்திருக்கிறார்கள் இப்போது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X