கோடிகள் கொடுப்பாங்கன்னு சொன்னாங்க.. பிக் பாஸ்ல பங்கேற்பவங்களுக்கு இவ்ளோதானாமே? வெளியானது தகவல்!

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் தொகை பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil : Rakshan, Amirtha Iyer Confirms their Entry - Filmibeat Tamil

கடந்த சில நாட்களாக அதிகரித்து இருக்கிறது பிக் பாஸ் ஜூரம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சி அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

நிகழ்ச்சி தொடங்கும் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

நிகழ்ச்சியின் போட்டி விதி

நிகழ்ச்சியின் போட்டி விதி

அக்டோபர் 4 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. தொலைத்தொடர்பு, இன்டர்நெட், டிவி என தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாமல், 100 நாள்கள் இந்த வீட்டில் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி.

வசுந்தரா தாஸ்

வசுந்தரா தாஸ்

இதற்கிடையே, பிக் பாஸ் 4 வீட்டுக்கு வருகிறவர்கள் பற்றி சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது, ஒரு லிஸ்ட். அது உண்மையா கற்பனையாக உருவாக்கப்படும் லிஸ்ட்டா என்ற சந்தேகமும் எழுகிறது. அதில் பங்கேற்பதாகக் கூறப்படும் சிலர், திடீரென மறுப்புத் தெரிவித்து வருவதும் அதற்கு காரணம். சமீபத்தில் நடிகை வசுந்தரா தாஸ் பங்கேற்க இருப்பதாகத் தகவல்.

சம்பள லிஸ்ட்

சம்பள லிஸ்ட்

இந்நிலையில் இதில் பங்கேற்க, பலருக்கு கோடி கணக்கில் பேசப்படுவதாகவும் சிலர் அதிகமாகக் கேட்டதால் இந்த நிகழ்ச்சியில் சேர்க்கப்படவில்லை என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால், தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பலருக்கு கொடுக்கப்படும் சம்பள லிஸ்ட் வெளியாகி இருக்கிறது.

மோனல் கஜ்ஜார்

மோனல் கஜ்ஜார்

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் பிரபல நடிகர் நாகார்ஜுனா. இந்த நிகழ்ச்சி கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. நடிகை மோனல் கஜ்ஜார், சூரிய கிரண், அம்மா ராஜசேகர், பாடகர் நோயல், மெஹபூப் தில்சே, யூடியூப் பிரபலம் ஹரிகா, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அரியானா குளோரி, சுஜாதா உள்பட பலர் பங்கேற்றுள்ளனர்.

அம்மா ராஜசேகர்

அம்மா ராஜசேகர்

இதில் ஒரு வாரத்தோடு வெளியேறிவிட்டார் இயக்குனர் சூரிய கிரண். அவருக்கு ரூ.1 லட்சம். டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் சுஜாதாவுக்கு வாரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய். அம்மா ராஜசேகர், நாகவள்ளி, கல்யாணி ஆகியோருக்கு நிகழ்ச்சியின் மூலம் வெளியே நல்ல பெயர் இருப்பதால், வாரத்துக்கு 2.5 லட்சத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வரை கிடைக்குமாம்.

நடிகர் நாகார்ஜுனா

நடிகர் நாகார்ஜுனா

'மீன் குழம்பும் மண்பானையும்' படத்தின் நடித்த தனது காதல் மனைவி எஸ்தர் நோரன்ஹாவை சமீபத்தில் விவாகரத்து செய்த பாடகர் நோயலுக்கு ரூ. 3 லட்சம். நடிகை மோனல் கஜ்ஜாருக்கு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சம் வரை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஒரு எபிசோடுக்கு ரூ. 14 லட்சம் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X