ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் கதை இது தான்.. ஒரு செம ட்விஸ்ட் இருக்கு.. இயக்குநர் சொன்னதை பாருங்க!

சென்னை: ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டிட்ன் எட்டாவது திரைப்படமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் பிரதர்.இப்படம் அனைத்துத் தரப்பு ரசிகர்ளும் கண்டுமகிழும் வகையில் கலகலப்பான குடும்ப படமாக உருவாகியுள்ளது.பிரியங்கா மோகன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் நட்டி , பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை என்ன என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது அது என்ன என்று பார்க்கலாம்.

'பிரதர்' திரைப்படத்திற்காக 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசை யமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷம் கையாளுகிறார். பிரபல ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் உடன் பல்வேறு படங்களில் பணியாற்றிய இவர், தனுஷ் நடித்த 'மாறன்', ஜி.வி பிரகாஷ் நடித்த 'செம' மற்றும் ஸ்கிரீன்ரீ சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த 'அகிலன்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்தில் வரும் 'மக்காமிஷி' பாடலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இணையத்தில் இந்த பாடலை ரசிகர்கள் கொண்டாடி டிரெண்டாக்கி வருகின்றனர்.

brother jayam ravi diwali 2024

படத்தின் கதை: இத்திரைப்படம் தீபாவளி பண்டிகையொட்டி அக்டோபர் 31ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் இயக்குனர் எம்.ராஜேஷ் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பிரதர் படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.கதை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இவர் செய்யும் விஷயம் அனைத்தும் பிரச்சனையாக வந்து குடும்பத்திற்கு தலைவலியாக மாறுவதால்,கார்த்தியை நினைத்து அவனது பெற்றோருக்கு எப்போதும் கவலை அடைகின்றனர். ஆனால் அவன் சகோதரியின் பார்வையில் அப்படி இல்லை. அவள் அவளை குழந்தையாகவே நினைக்கிறாள். இதனால், யாருக்கும் அடங்காத கார்த்திக் அக்காவின் அன்புக்கு மட்டும் பணிந்து போகிறான்.அக்காவை திருமணம் செய்து கொடுத்தும் அக்காவை பிரிய முடியாமல்,அதே வீட்டுக்கு வந்துவிடுகிறான்.

அக்காவின் அன்பு: ஆனால், கார்த்தியால் தனது சகோதரியின் அதீத ஒழுக்கம் கொண்ட, ஒரு கட்டுக்கோப்பான குடும்பத்தில் , எல்லாத்தையும் பிளான் போட்டு செய்யும் வீட்டுக்குள் இருக்க முடியமால் திணறுகிறான். அது அவனது குழப்பமான சூழலுக்கும், அவன் வளர்ந்த விதத்துக்கும் புறம்பாக உள்ளது. கார்த்தியால் அக்காவின் வீடு என்கிற புது சூழலுக்கு தன்னை தகவமைத்துக் கொள்ள முடிந்ததா? இல்லையா என்பது தான் பிரதர் படத்தின் கதை படக்குழுதெரிவித்துள்ளது.

அனைவருக்கும் பிடிக்கும்: தமிழ் சினிமாவில் அக்கா - தம்பி இருவருக்கும் இடையிலான உறவை பேசும் படங்கள் பல வந்துள்ளது. ஆனால் நான் இயக்கி இருக்கும் இந்த பிரதர் படம் இன்றைய தலைமுறையினருக்கான அக்கா - தம்பி படமாக இருக்கும். அவர்கள், இந்த தலைமுறையில் எப்படி வாழ்கிறார்கள். பிரச்சனைகளை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கிறார்கள் என்பதை உங்களுக்கு கதையாக தந்துள்ளேன். அக்கா - தம்பிக்கு இடையில் உள்ள பந்தத்தை ஒரு கூட்டுக் குடும்ப பின்னணியில் கூறி இருக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X