SK21 ராணுவ வீரரின் பயோபிக்..படத்தின் கதை இதுதான்.. வலைப்பேச்சு பிஸ்மி சொன்ன சூப்பர் தகவல்!
சென்னை: SK21 Story ( சிவகார்த்திகேயன் 21படத்தின் கதை) நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 21வது திரைப்படம் ஒரு ராணுவ வீரரின் பயோபிக் என்று வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம் வெளியானது. இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார்.
இதில் அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர் ஹிட்டடித்தது.

சிவகார்த்திகேயனின் 21வது படம்: மாவீரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளார்.
காஷ்மீரில் படப்பிடிப்பு: இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வந்த நிலையில், டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றதால், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். 1960ம் ஆண்டு நடந்தது போன்று படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.
முகுந்த் வரதராஜனின் பயோபிக்: இந்நிலையில், வலைப்பேச்சு பிஸ்மி அளித்துள்ள பேட்டியில், SK 21 படம் ராணுவ பின்னணி கதைக்களத்தை கொண்டது. இப்படத்தின் கதை சென்னை புறநகரில் வசீத்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பயோபிக் தான் இந்த படத்தின் கதை. அவர் பத்திரிக்கையாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டு ஜெனலிசம் படிக்கிறார். அதன் பிறகு அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைக்கிறது.

மிக முக்கியமான படம்: கடைசியில் தீவிரவாதிக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் அவர் வீரமரணம் அடைந்துவிடுகிறார். இந்த ராணுவ வீரரின் கதையைத் தான் இவர்கள் படமாக எடுத்துவருகிறார்கள். முகுந்த் வரதராஜனின் கேரக்டரில் தான் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் கொல்லப்படும் இதுதான் மிகவும் முக்கியமான ஒன்றும். இப்படம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக இருக்கும் என்று வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











