ஜெயிலர் படத்தின் கதை இது தான்... லீக்கான செம ஹாட் தகவல்
சென்னை : ரஜினி நடிக்க உள்ள ஜெயிலர் படத்தின் முழு கதையும் இணையத்தில் லீக்காகி விட்டதால் படக்குழுவினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படமான தலைவர் 169 படத்தை இயக்க போவது யார் என்ற கேள்விக்கு பல இளம் டைரக்டர்களின் பெயர்கள் சொல்லப்பட்டது. ஆனால் அந்த பட்டியலில் இடம்பெறாத, யாரும் எதிர்பார்க்காத நெல்சன் திலீப்குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
பிப்ரவரி மாதம், தலைவர் 169 படத்தை தாங்கள் தான் தயாரிக்க போவதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் அறிவித்தது. நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்தது.

ஷுட்டிங் எப்போ ஆரம்பிப்பீங்க
அதற்கு பிறகு சன் பிக்சர்ஸ் அறிவிப்பு எதையும் வெளியிடாத நிலையில், தலைவர் 169 படம் பற்றிய பல தகவல்கள் வெளிவந்தன. இருந்தாலும் பட அறிவிப்பு வெளியிடப்பட்டு பல மாதங்கள் ஆன பிறகு ஷுட்டிங் துவங்கப்படவோ, அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவோ இல்லை. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்து எப்போது தான் ஷுட்டிங்கை ஆரம்பிப்பீங்க என கேட்க துவங்கினர்.

ஜெயிலர் டைட்டில்
இந்த சமயத்தில் சமீபத்தில், தலைவர் 169 படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்திருப்பதாக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. ரத்த கரையுடன் இருக்கு பெரிய வெட்டுக்கத்தி தலைகீழாக தொங்குவது போன்ற ஒரு போஸ்டருடன் டைட்டிலை அறிவித்தது சன் பிக்சர்ஸ். இந்த போஸ்டரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

ஜெயிலர் கதை இது தானா
இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ஜெயிலர் படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு கேங்ஸ்டர் கும்பல் சிறையை உடைக்க பிளான் போடுகிறது. அந்த சிறையில் பணியாற்றும் அனுபவம் மிக்க ஜெயிலரான ரஜினிகாந்த் அந்த பிளானை எப்படி முறியடித்து, சிறையை காப்பாற்றுவதுடன், கேங்ஸ்டர் கும்பலை எப்படி வளைத்து பிடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

செம பிளானா இருக்கே
முழுக்க முழுக்க சிறையிலேயே எடுக்கப்பட உள்ள ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட உள்ளதாம். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடமும், முக்கியமான ரோல் ஒன்றில் நடிக்க பிரியங்கா அருள் மோகனிடமும் பேசப்பட்டு வருகிறதாம். இந்த படத்திற்காக சிவ ராஜ்குமார், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.

சன் பிக்சர்ஸ் பிளான்
கட்டாய வெற்றியை கொடுத்தே தீர வேண்டிய நிலையில் நெல்சன் இருப்பதால், ஒவ்வொரு கேரக்டரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறாராம். ஆக்ஷன், த்ரில்லர் படமான ஜெயிலர் படத்தை மிக பிரம்மாண்ட பொருட் செலவில் எடுக்க சன் பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video

பீஸ்ட் மாதிரி தான் ஜெயிலருமா
பீஸ்ட் படம் முழுவதும் ஒரு மாலில் நடக்கும் கடத்தலை மட்டும் மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அதே போல் ஜெயலரில் சிறையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளது. பீஸ்ட் படத்திற்காக மால் போன்று செட் அமைக்கப்பட்டது. அதே போல் ஜெயிலர் படத்திற்காக பெரிய சிறையை செட் போட முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











