சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட பிக் பாஸ்

By Siva

சென்னை: பிக் பாஸ் சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார்.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா பல வாரங்கள் கழித்து தற்போது தான் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். முன்பு ஒரு முறை நாமினேட் ஆன அவரை வீட்டின் தலைவியாக இருந்த யாஷிகா காப்பாற்றிவிட்டார்.

தற்போதும் அது நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒயில்டு கார்டு

ஒயில்டு கார்டு

நாயகி சீரியலில் நடித்துக் கொண்டிருந்த விஜயலட்சுமியை அதில் இருந்து விலக வைத்து பிக் பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். ஒயில்டு கார்டு விஜயலட்சுமி இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறாரே. இதற்காகத் தான் பிக் பாஸ் அவ்வளவு ரிஸ்க் எடுத்து அழைத்து வந்தாரா என்று விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் விஜயலட்சுமி மாறிவிட்டார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

விஜயலட்சுமி ஐஸ்வர்யாவை எரிச்சல் அடைய வைக்கிறார். உங்களுக்கு சுயபுத்தி இல்லை, தமிழ் மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்று விஜயலட்சுமி கூறியதை கேட்டு ஐஸ்வர்யா தம்மடிக்கும் அறையில் அழுதார். அவர் அழுததை பார்த்த பார்வையாளர்களுக்கு அது நீலிக் கண்ணீராகவே தெரிந்தது. அதனால் அவர் மீது பாவப்படத் தோன்றவில்லை.

பீட்டர்

பீட்டர்

நேற்றும் கூட ஐஸ்வர்யா விஜயலட்சுமியுடன் மோதினார். அவர் படபடவென பீட்டர் விட்டால் பயந்து போகிற ஆளா விஜி. பதிலுக்கு பீட்டர் விட்டு பார்வையாளர்களின் கைதட்டல்களை வாங்கினார். ஆனால் ஐஸ்வர்யா ரசிகர்கள் தான் விஜயலட்சுமியை சமூக வலைதளங்களில் கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள். நீங்க நடத்துங்க விஜி, நாங்க இருக்கோம் என்கிறார்கள் மெஜாரிட்டியான ஐஸ்வர்யா ஹேட்டர்ஸ்.

செல்லம்

செல்லம்

இந்த விஜயலட்சுமி ஐஸ்வர்யாவையே கடுப்பேற்றிக் கொண்டிருப்பார் என்று பிக் பாஸ் எதிர்பார்த்திருக்க மாட்டார். இதற்கு பெயர் தான் சொந்த செலவில் சூனியம் வைப்பதோ பிக் பாஸ்? . பார்வையாளர்களுக்கு ஐஸ்வர்யாவை கண்டாலே பிடிக்காது என்பது தெரிந்து தான் விஜயலட்சுமி அவரை டார்கெட் செய்வதாகவும் கூறப்படுகிறது. தப்பில்லையே, விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X