கிராபிக்ஸ் வேண்டாம் நான் தான் மேஜிக் பண்ணுவேன்: அடம்பிடித்து நடித்த விஜய் #Mersal
Recommended Video

சென்னை: மெர்சல் படத்தில் வரும் மேஜிக் காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்தாராம்.
அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளி ஸ்பெஷலாக நாளை ரிலீஸாகிறது. படம் பல தடைகளை தாண்டி ரிலீஸாக உள்ளது.
பட ரிலீஸ் தொடர்பாக விஜய் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்
படத்தில் விஜய் மேஜிக் கலைஞராக வருகிறார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதற்காக அவர் இரண்டு மேஜிக் கலைஞர்களிடம் பயிற்சி எடுத்துள்ளார்.

வேண்டாம்
மெர்சல் படத்தில் 16 மேஜிக் காட்சிகள் உள்ளதாம். அந்த காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்து அசத்தியுள்ளாராம்.

பிடிக்காது
சண்டை காட்சிகளில் ரிஸ்கான காட்சிகளில் கூட டூப் வேண்டாம் நான் தான் நடிப்பேன் அப்பொழுது தான் ஒரிஜினலாக இருக்கும் என்று அடம்பிடிப்பவர் விஜய்.

திருவிழா
சமூக வலைதளங்கள் பக்கம் சென்றால் திரும்பும் பக்கம் எல்லாம் மெர்சல் கொண்டாட்டமாக உள்ளது. படம் நிச்சயம் சூப்பர் ஹிட் ஆகும் என்கிறார்கள் தளபதி ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











