இதனால் தான் விஜய்யை வெறுக்கிறேன்: கருணாகரன்
Recommended Video

சென்னை: விஜய்யை வெறுப்பதற்கான காரணத்தை தெரிவித்து தளபதி ரசிகர்களிடம் திட்டு வாங்கியுள்ளார் கருணாகரன்.
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய் புது தோரணையில் பேசினார். அரசியல் பற்றி எல்லாம் தைரியமாக பேசிய விஜய்யை அவரின் ரசிகர்கள் பாராட்டினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் குட்டிக் கதை எல்லாம் சொன்னார் விஜய்.
விஜய்
குட்டிக் கதை தலைவர்களுக்கு மட்டுமா அல்லது நடிகர்களுக்குமா? உங்களின் ரசிகர்களை கெட்ட வார்த்தைகள் பேசாமல் இருக்கச் சொல்லுங்கள் நண்பா நண்பி. நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்கிறார்களா என்று பாருங்கள். அவர்களை திட்டி, வெறுப்பை காட்ட வேண்டாம் என்று கூறுங்கள் என நடிகர் கருணாகரன் ட்விட்டரில் தெரிவித்தார்.
சண்டை
கருணாகரனின் ட்வீட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் அவருடன் மல்லுக்கு பாய்ந்தனர். கருணாகரனை கெட்ட வார்த்தையால் திட்டினார்கள். இதை பார்த்த அவர் பதிலடி கொடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் யாருடனும் மோத வேண்டாம் என்று விஜய் சொல்லியும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாகரன்
விஜய் ரசிகர் ஒருவரின் ட்வீட்டை பார்த்த கருணாகரன் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, என் தந்தை ரா அதிகாரியாக இந்த நாட்டிற்கு என்ன செய்தார் என்பதற்கான சான்றிதழ்களை நான் போஸ்ட் செய்கிறேன் தம்பி. விஜய் சாரை நான் வெறுக்கத் துவங்கியதற்கு உங்களை போன்ற போலி டிரோல் ஐடிகள் தான் காரணமே தவிர வேறொன்றும் இல்லை என்றார்.
பதிலடி
கடுப்பாகுது என்று கூறிய விஜய் ரசிகரிடம் சர்கார் விழாவில் விஜய் தெரிவித்த வசனத்தையே பதிலாக கூறியுள்ளார் கருணாகரன். அதாவது கடுப்பாவுதுன்னா கம்முன்னு இருக்கணும் அப்போ தான் லைஃப் ஜம்முன்னு இருக்கும் ப்ரோ என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











