நித்யா மேனன்..பார்வதி நாயர் கர்ப்பத்திற்கு காரணம் இதுதானாம்? வெளியான முக்கிய தகவல்!!
சென்னை : நடிகைகள் பார்வதி மற்றும் நித்யா மேனன் கர்ப்பமாக இருப்பதாக சொன்ன பதிவுக்கு பின்னால் இருக்கும் உண்மை தெரிந்ததால் ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
நடிகை நித்யா மேனன் மலையாளத்தில் அனுமான் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். 2008ம் ஆண்டு வெளியான ஆகாஷ கோபுரம் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வரத் தொடங்கிய நித்யா மேனன் நடிக்கும் படங்களில் எல்லாம், நித்யா மேனனின் பாத்திரங்கள் தனித்துவத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நடிகை நித்யா மேனன்
தமிழில் வெப்பம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் நடித்த காஞ்சனா, மெர்சல், ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் இவரின் சிறப்பான நடிப்பால், அப்லாசை பெற்று இருப்பார். சமீபத்தில் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்ததும் பல இளசுகளும் எனக்கும் நித்யா மேனன் போல ஒரு பெஸ்டி வேண்டும் என்று அடம்பிடிக்கத் தொடங்கி விட்டனர்.

கர்ப்பமா இருக்கீங்களா?
பான் இந்தியா ஸ்டாராகி உள்ள நித்யா மேனன் நேற்று முன்தினம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்தார். அதில், பிரக்னன்சி பாசிட்டிவ் கிட் போட்டோவை ஷேர் செய்திருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் என்னது கர்ப்பமா இருக்கீங்களா? திருமணம் ஆகாமல் குழந்தையா? என்று கமெண்ட்டுகளை பதிவிட்டு வந்தனர்.

நடிகை பார்வதியும் அதே பதிவு
மலையாள நடிகையான பார்வதி, பத்மபிரியா, அர்ச்சனா பத்மினி உள்ளிட்ட பலரும் நித்தியா மேனன் வெளியிட்ட அதே கர்ப்பம் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். அதன் பிறகு தான் இவர்கள் கர்ப்பமாக இல்லை ஏதோ விளம்பரத்திற்காக இவ்வாறு பதிவிட்டுள்ளார்கள் என்று ரசிகர்கள் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர்.
காரணம் இதுதான்
இந்நிலையில் நித்யா மேனனின் கர்ப்பத்திற்கு காரணம் இயக்குநர் அஞ்சலி மேனன் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அஞ்சலி மேனன் இயக்கத்தில் நித்யா மேனன், பார்வதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் wonder women. கர்ப்பமாக இருக்கும் சில பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தான் படப்பிடிப்பு நடந்தது. அந்த படத்தை வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யவே இப்படி பிரக்னன்சி கிட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











