twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதெல்லாம் வெறுப்பை உண்டாக்கும்.. விஜய்க்கு ஆதரவாக 'பாஜக' பேரரசு ட்வீட்... விளாசும் நெட்டிசன்கள்

    By
    |

    Recommended Video

    Thalapathy Vijay in Master Shooting Spot | Master | Lokesh Kanagaraj

    சென்னை: நடிகர் விஜய்-க்கு எதிரான போராட்டம் தேவையற்றது என்று சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த சேர்ந்த இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார்.

    விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜித் நடித்த திருப்பதி உள்பட பல்வேறு திரைப்படங்களை இயக்கியவர் பேரரசு.

    இவர் மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்தார்.

    வேற எந்த ஹீரோயினுக்கும் கிடைக்கலையே... நம்ம 'ரவுடி பேபி' சாய் பல்லவிக்கு இப்படியொரு பெருமைவேற எந்த ஹீரோயினுக்கும் கிடைக்கலையே... நம்ம 'ரவுடி பேபி' சாய் பல்லவிக்கு இப்படியொரு பெருமை

    மோடியின் தேசப்பணி

    மோடியின் தேசப்பணி

    பாஜகவில் இணைந்தது ஏன்? என்பது குறித்து அவர் கூறும்போது, பிரதமர் மோடியின் தேசப்பணி என்னை வியக்க வைக்கிறது. அதனால் பாஜகவில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று என் விருப்பத்தை தெரிவித்தேன். அதனடிப்படையில் அந்த கட்சியில் என்னை இணைத்துள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

    விஜய் வீட்டில் ரெய்டு

    விஜய் வீட்டில் ரெய்டு

    இந்நிலையில் நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை, திடீரென ரெய்டு நடத்தியது. படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீடு, நீலாங்கரையில் உள்ள வீடு, பனையூர் வீடு ஆகியவற்றில் சோதனை நடந்தது.

    மாஸ்டர் படப்பிடிப்பில்

    மாஸ்டர் படப்பிடிப்பில்

    சோதனை முடிந்து நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது அங்கு வந்த பாஜவினர், நடிகர் விஜய்யின் படப்பிடிப்பை அங்கு நடத்தக் கூடாது என்று போராடத்தில் ஈடுபட்டனர். அங்கு விஜய் ரசிகர்களும் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

    போராட்டம் தேவையற்றது

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவில் சேர்ந்த இயக்குனர் பேரரசு, டிவீட்டரில் இந்தப் போராட்டம் தேவையற்றது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர், 'நெய்வேலியில் விஜய் படப்பிடிப்பில் பாஜகவினர் போராட்டம் தேவையற்றது! விஜய் நடிகர், அரசியல்வாதி அல்ல! இந்தமாதரி செயல்பாடுகள் பாஜகவின் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்! அவருடைய கோடானுகோடி ரசிகர்களுக்கு மனவேதனயை தரும். நாட்டில் போராட வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கு! என்று கூறியுள்ளார்.

    ரெண்டே நாள்ல

    இதையடுத்து ரசிகர்கள் அவரை, கண்டபடி கலாய்த்துள்ளனர். ஒரு ரசிகர், என்ன தல கட்சியில சேர்ந்த ரெண்டே நாள்ல கட்சிக்கு எதிரா போர்க்கொடி தூக்குறீங்க? என்று கேட்டுள்ளார். மற்றொருவர், நாட்டில் நடக்கும் எத்தனையோ விஷயங்களை திசை திருப்பத்தான் ரெய்டு போராட்டமெல்லாம் என்று கூறியுள்ளார்.

    English summary
    BJP Workers Protest against Tamil Actor Vijay’s Shoot in Neyveli Mining Area. Director perarasu, who recently joined BjP has said, this kind of agitation against vijay is needless
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X