Nesamani: உலகமே நேசமணிக்கு பிரார்த்தனை செய்ய இந்த புண்ணியவான் தான் காரணம்

By Siva

Recommended Video

#PrayForNesamani | டிவிட்டரில் டிரெண்டாகும் 'காண்டிராக்டர் நேசமணி' ஹேஷ்டேக்- வீடியோ

சென்னை: கான்டிராக்டர் நேசமணி உலக அளவில் டிரெண்டாக இவர் தான் காரணம்.

ப்ரெண்ட்ஸ் படத்தில் வந்த கான்டிராக்டர் நேசமணி பற்றி உலக அளவில் இன்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். தலையில் சுத்தியல் விழுந்ததால் சுயநினைவை இழந்த நேசமணி குணமடைய உலகமே பிரார்த்தனை செய்கிறது.

This man brings back Nesamani

எப்பவோ அடிபட்ட நேசமணிக்கு தற்போது என்ன பிரார்த்தனை, திடீர் என்று அவர் எப்படி உலக அளவில் டிரெண்ட் ஆனார் என்று நினைக்கலாம். நேசமணி உலக அளவில் டிரெண்டாக இவர் தான் காரணம்.

சுத்தியலின் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் போட்டு இதை உங்கள் நாட்டில் எப்படி சொல்வீர்கள் என்று சிவில் என்ஜினியரிங் லர்னர்ஸ் பக்கத்தில் ஒருவர் கேட்டார். அதற்கு விக்னேஷ் பிரபாகர் என்கிற தமிழர் இதற்கு பெயர் சுத்தியல் என்று தெரிவித்தார். மேலும் கான்டிராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழுந்ததையும் விவரித்தார்.

மேலும் கான்டிராக்டர் நேசமணி தலையில் சுத்தியல் விழும் வீடியோவை சிலர் போஸ்ட் செய்தார்கள். அதன் பிறகு ஆளாளுக்கு நேசமணியை பற்றி பேசத் துவங்கினர். மேலும் நேசமணி விரைவில் குணமடைய பிரார்த்தனையும் செய்கிறார்கள்.

நேசமணி தாக்கப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். நேசமணி தாக்கப்பட்டு அப்பலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் கிண்டல் செய்கிறார்கள்.

எது எப்படியோ, கான்டிராக்டர் நேசமணியால் இன்று நெட்டிசன்கள் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். நேசமணி ராக்ஸ், வடிவேலு ராக்ஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X