தனுஷ் இல்ல சரத்குமாருக்கு தான் எல்லா ரைட்ஸும் இருக்கு
சென்னை: மாரி 2 படத்தில் வந்த வசனம் தனுஷுக்கு அல்ல மாறாக சரத்குமாருக்கே பொருந்தும்.
மாரி 2 படத்தில் If you are bad I am your dad என்று தனுஷ் பேசிய வசனம் மிகவும் பிரபலமானது. அது அடிதாங்கி வினோத் பரிந்துரைத்த வசனம் என்று தனுஷ் தெரிவித்தார்.
இந்நிலையில் அந்த வசனத்திற்கு ஏற்ப ஒரு மீம் போடப்பட்டுள்ளது.
சரத்குமார்
வில்லியாக நடித்து வரும் மகள் வரலட்சுமியை பார்த்து If you are bad I am your dad என்று சரத்குமார் சொல்வது போன்று ஒருவர் மீம் போட்டுள்ளார்கள். அருமை அருமை.

சிறப்பு
வில்லி கதாபாத்திரத்திற்கு நச்சென்று பொருந்துகிறார் வரலட்சுமி சரத்குமார். கொடுத்த கதாபாத்திரமாகவே நடித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுவிடுகிறார். அவர் வில்லியாக நடித்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்
இந்த ஆண்டு வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் மிஸ்டர் சந்திரமௌலி, எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம், சண்டக்கோழி 2, சர்கார் மற்றும் மாரி 2 ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

ஹீரோயின்கள்
சண்டக்கோழி 2, மாரி 2 என்று இரண்டு இரண்டாம் பாகம் படங்களில் நடித்துள்ளார் வரலட்சுமி. இரண்டு படங்களிலுமே அவரும், ஹீரோயினும் சேர்ந்து வரும் காட்சிகள் இல்லை. சர்கார் படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக பேசப்பட்டவர் வரலட்சுமி பாப்பா தான்.


Click it and Unblock the Notifications











