ரயில் நிலையத்தில் குயில் போன்று பாடும் பாட்டி: வைரலாகும் வீடியோ
Recommended Video
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் அமர்ந்திருந்த பாட்டி பாடியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ரனகாட் ரயில் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் பிளாட்ஃபார்மில் அமர்ந்து இந்தி பாடல்களை பாடியுள்ளார். அதை வீடியோ எடுத்த ஒருவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டார்.

அந்த வீடியோவில் அந்த மூதாட்டி 1972ம் ஆண்டு வெளியாகி ஹிட்டான ஷோர் படத்திற்காக லதா மங்கேஷ்கர் பாடிய ஏக் பியார் கா நக்மா ஹை பாடலை அவ்வளவு அழகாக பாடியுள்ளார். என்ன பெரிய வீடியோ என்று நினைத்து பார்த்துவிட்டு இந்த பாட்டிக்கு இப்படி ஒரு குரலா என்று வியக்காதவர்களே இல்லை எனலாம்.
பாட்டி பாட்டு பாடிய வீடியோ வைரலாகியுள்ளது. பிரபலங்களின் வீடியோக்களுக்கு இணையாக பாட்டியின் வீடியோவையும் பலரும் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.
வீடியோவை பார்த்தவர்கள் அதை வெளியிட்டவரிடம் அந்த மூதாட்டியின் தொடர்பு எண்ணை கேட்டார்கள். இதையடுத்து அவர் மூதாட்டியின் தொடர்பு எண்ணை பெற்றுள்ளார். என்ன ஒரு அழகான குரல், இந்த பெண் இளமையாக இருக்கும்போதே பாடகியாகி இருந்திருந்தால் இந்நேரம் பெரிய ஆளாகியிருப்பார். தற்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. அவருக்கு படங்களில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். கடவுள் அவரை ஆசிர்வதிப்பாராக என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோவை பார்த்தால் நீங்களும் அவரின் குரலை நிச்சயம் பாராட்டுவீர்கள்.


Click it and Unblock the Notifications











