Soundarya Rajinikanth Wedding: அம்மா சவுந்தர்யா கையில் உள்ள மருதாணியை ரசிக்கும் வேத்: வைரல் போட்டோ
Recommended Video

Soundarya Rajinikanth Wedding: ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா திருமணம்- வீடியோ
சென்னை: சவுந்தர்யா ரஜினிகாந்தின் மகன் வேத் தன் அம்மா கையில் இருக்கும் மருதாணியை ரசித்து பார்த்தபோது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், நடிகரும்- தொழில் அதிபருமான விசாகன் வணங்காமுடிக்கும் சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இன்று திருமணம் நடைபெறுகிறது.

முன்னதாக நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் டான்ஸ் ஆடி அசத்தினார். இந்நிலையில் சவுந்தர்யாவின் கையில் உள்ள மருதாணியை அவரின் மகன் வேத் பார்த்து ரசிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
திருமணத்திற்கு முன்னதாக சவுந்தர்யா தன் வாழ்வின் 3 முக்கியமான ஆண்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த 3 முக்கியமான ஆண்கள் அப்பா ரஜினி, மகன் வேத் மற்றும் விசாகன் ஆவர்.
சவுந்தர்யா, விசாகனுக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகிறது.
Comments


Click it and Unblock the Notifications