தலைவி படத்துக்கு நோ.. திட்டவட்டமாக மறுத்த ஆர்.ஆர்.ஆர் ஹீரோ.. என்ன ரோல் தெரியுமா?

சென்னை: ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி படத்தில் நடிக்க ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஹீரோ ஜூனியர் என்.டி.ஆர் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மறைந்த தமிழக முதல்வரும் பழம்பெரும் நடிகையுமான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி எனும் தலைப்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கி வருகிறார்.

கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் நடந்து வந்த அந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் ஹீரோ

ஆர்.ஆர்.ஆர் ஹீரோ

பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் இரத்தம் ரணம் ரெளத்திரம் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வருகின்றனர். கொமரம் பீம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ஜூனியர். என்.டி.ஆர் தலைவி படத்தில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எம்.ஜி.ஆர் ரோலில்

எம்.ஜி.ஆர் ரோலில்

ஜெயலலிதா பயோபிக்கான தலைவி படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். எம்.ஜி.ஆர் ரோலில் நடிகர் அரவிந்த் சாமி நடித்து வருகிறார். கங்கனா ரனாவத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் டீசருக்கு கிடைக்காத வரவேற்பு அரவிந்த் சாமியின் எம்.ஜி.ஆர் ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

என்ன ரோல்

என்ன ரோல்

எம்.ஜி.ஆரை போலவே என்.டி.ஆருடனும் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய நட்பு இருந்தது. தலைவி படத்தில் என்.டி. ராமாராவ் கதாபாத்திரத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் இயக்குநர் ஏ.எல். விஜய் கோரிக்கை விடுத்த நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தில் பிசியாக நடித்து வருவதால், அவரது கோரிக்கை ஜூனியர் என்.டி.ஆர் நிராகரித்து விட்டாராம். மேலும், நடிகர் பாலகிருஷ்ணாவும் என்.டி.ஆர் ஆக தலைவி படத்தில் நடிக்க மறுத்துள்ளார்.

தள்ளிப் போகுமா

தள்ளிப் போகுமா

கொரோனா வைரஸ் காரணமாக புதுப்பட ரிலீஸ் மற்றும் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட மாஸ்டர், சூரரைப் போற்று, கோப்ரா, மூக்குத்தி அம்மன், பூமி, ஜகமே தந்திரம், சுல்தான் உள்ளிட்ட பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதே போல ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள தலைவி படத்தின் ரிலீஸும் தள்ளிப் போகும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X