இந்த பாட்ட உங்க அப்பா தான் பாடனும்.. கண்டிஷன் போட்டு அமீர்!
சென்னை: மௌனம் பேசியதே, ராம், பருத்திவீரன் போன்ற படங்களை இயக்கியவர் அமீர்.
இயக்குநராக மட்டுமில்லாமல் நடிகராகவும் வெற்றி பெற்றவர் நடிகர் அமீர்.
தற்போது இவர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள அறியாத வயசு பாடலைப் பற்றிய சுவாரசிய தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

முதல் வெற்றி
2002 ஆம் ஆண்டு மௌனம் பேசியதே படத்தை இயக்கினார் அமீர். சூர்யா, த்ரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்திடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

வித்யாசமான ராம்
மௌனம் பேசியதே படத்துக்கு பிறகு மூன்று வருடங்கள் கழித்து இவர் இயக்கிய திரைப்படம் தான் ராம். இந்த படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு அம்மா கதாபாத்திரத்தில் சரண்யா பொன்வண்ணன் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதை களம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

பருத்திவீரன்
ராம் படத்தில் இடம் பெற்றுள்ள அம்மா பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. மௌனம் பேசியதே, ராம் போன்ற இரண்டு படத்திலும் யுவன் சங்கர் ராஜா அமீர் கூட்டணி ஒன்று சேர்ந்து வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து அறிமுக நாயகனாக கார்த்தி நடித்த பருத்திவீரன் திரைப்படத்தை இயக்கினார் இயக்குநர் அமீர். இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன் போன்ற பலரும் நடித்திருந்தனர். இது அமீருக்கு வெற்றி படமாக அமைந்தது மட்டுமில்லாமல் அறிமுக நாயகனாக இருந்த கார்த்திக்கும் ஹிட் படமாக அமைந்தது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடங்களும் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் அறியாத வயசு புரியாத மனசு என்ற பாடலை பாடியிருந்தார் இசைஞானி இளையராஜா. இந்த பாடல் குறித்து சுவாரசியமான தகவல்களை இயக்குனர் அமீர் பகிர்ந்துள்ளார்.

பாடிக்கொடுத்த இளையராஜா
இது குறித்து இயக்குனர் அமீர் கூறுகையில், யுவன் சங்கர் ராஜாவிடம்" உங்கள் அப்பா இந்த பாடலை பாடினால் நன்றாக இருக்கும் என்று கூறினேன். நீங்க என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்கு தெரியாது இந்த பாடலை அவர் தான் பாட வேண்டும் என்று நான் கூறிவிட்டேன். நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை இளையராஜா கேட்டுவிட்டு இந்த பாடலை பாடி கொடுத்தார். அந்த பாட்டில் இருக்கிற சின்ன சின்ன மாற்றத்தை நான் சொன்னதும் அதை அப்படியே பாடி கொடுத்தார் இளையராஜா" என்று அமீர் கூறியுள்ளார். பொதுவாகவே இளையராஜா பாட வந்தால் யுவன் சங்கர் ராஜா ஸ்டுடியோவில் இருக்க மாட்டாராம் அவரது இன்ஜினியர் தான் பாடலை ரெக்கார்ட் செய்வார் என்று அமீர் வேறு ஒரு போட்டியில் கூறியுள்ளார். அமீர் கூறிய இந்த சுவாரஸ்ய தகவல்கள் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications











