என்னாது, 2.0 இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள ரூ. 3.7 லட்சம் கட்டணமா!!
சென்னை: ரஜினியின் 2.0 இசை வெளியீட்டு விழாவில் 6 பேர் அமரக் கூடிய மேஜைக்கு ரூ. 3 லட்சத்து 71 ஆயிரத்து 625 கட்டணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோரை வைத்து ஷங்கர் எடுத்துள்ள படம் 2.0. படத்தை ஜனவரி மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை துபாயில் இசை வெளியீட்டு விழாவை ஊர், உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக நடத்துகிறார்கள்.
விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. அவரே லைவாக கச்சேரி பண்ணுகிறார். இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வசூலிக்கப்படும் கட்டணம் என்று கூறி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

6 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 3719515, 8 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 469588, 12 பேர் அமரக்கூடிய மேஜைக்கு ரூ. 682232 கட்டணம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இணையத் தளத்திலும் இதனை வெளியிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











