விஜய் - சங்கீதா பிரிந்திருப்பதற்கு காரணம் இதுதானா?.. ஒரு முடிவோட இருக்கார்போல.. பிரபலம் சொன்ன சீக்ரெட்
சென்னை: நடிகர் விஜய் கடைசியாக GOAT படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கிறார். அப்படத்தை ஹெச்.வினோத் இயக்குகிறார். சூழல் இப்படி இருக்க தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். அக்கட்சியின் முதல் மாநில மாநாடு சமீபத்தில்தான் நடந்து முடிந்தது. அம்மாநாட்டில் விஜய்யின் தாய், தந்தை கலந்துகொண்டார்கள். அதேசமயம் விஜய்யின் மனைவியோ, மகனோ, மகளோ கலந்துகொள்ளவில்லை.
கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக GOAT படம் வெளியானது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம்: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கும் படம்தான் விஜய்க்கு கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக களம் காண்கிறது. கண்டிப்பாக அரசியலிலும் அவரை வெற்றி பெற வைத்துவிட வேண்டுமென்ற முனைப்பில் அவரது ரசிகர்கள் முழு மூச்சோடு கள பணியாற்ற தொடங்கியிருக்கிறார்கள்.
முதல் மாநில மாநாடு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முக்கியமாக தாய், தந்தையுடன் பிரச்னை என்று கூறப்பட்ட நிலையில் விஜய்யின் தாய் ஷோபாவும், தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும் கலந்துகொண்டார்கள். மேலும் தான் பேசப்போவதற்கு முன்னதாக கீழே இறங்கி வந்து ஷோபாவிடமும், எஸ்.ஏ.சியிடமும் ஆசீர்வாதம் வாங்கி சென்றது பார்ப்பவர்களை நெகிழ செய்தது.
மனைவி ஆப்செண்ட்: அதேசமயம் விஜய்யின் மனைவி சங்கீதா, மகன் சஞ்சய், மகள் சாஷா ஆகிய மூன்று பேரும் மாநாட்டுக்கு வரவில்லை. அதனை கவனித்த ஒரு தரப்பினர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் பிரச்னை என்று கடந்த சில மாதங்களாகவே பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது. ஒருவேளை அது உண்மைதான்போல; முரசொலி செல்வத்தின் மரணத்துக்கு சென்ற சங்கீதாவால் ஏன் தனது கணவரின் முதல் மாநில மாநாட்டுக்கு வர முடியவில்லை. என்னதான் நடக்குதோ என்று சரமாரியாக கேள்விகளை எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கும் விஜய் இதனை குறித்து விளக்க வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
பத்திரிகையாளர் சங்கர்: இந்நிலையில் யூட்யூபில் பேட்டி கொடுத்து பிரபலமான பத்திரிகையாளர் சங்கர் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “விஜய்யும், சங்கீதாவும் நிரந்தரமாக பிரிந்துவிட்டார்களா என்பது குறித்து தெரியாது. ஆனால் ஜோதிடர் ஒருவர் விஜய்யிடம், நீங்கள் பிரம்மச்சரியம் இருந்தால் ஆட்சியை பிடிக்கலாம் என்று சொன்னதாக சொல்கிறார்கள். அந்த கடலூர் ஜோதிடர் விஜய்யின் வாழ்க்கையில் முக்கியமான ரோல் வகிக்கிறார்.
வெளிப்படுத்த வேண்டும்: எனவே அந்த ஜோதிடர் ஒருவேளை அப்படி சொல்லியிருந்தால் தனது மனைவியை விஜய் பிரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் சினிமாக்காரர்களின் வாழ்க்கையில் ஜோதிடர்களின் பங்கு முக்கியத்துவமாக இருக்கும். ஆனால் ஒன்று விஜய் இப்போது பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டார். கலைஞர் கருணாநிதியோ, எம்ஜிஆரோ தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து வைத்ததில்லை. எனவே சங்கீதா குறித்து விஜய் தெளிவுப்படுத்த வேண்டும்” என்றார்.


Click it and Unblock the Notifications











