நாசா கனவு.. டைம் டிராவல்.. புத்தக பிரியர்.. சுஷாந்த் சிங்கின் வீட்டில் இத்தனை விஷயங்கள் இருக்கா?
மும்பை: எம்.எஸ் தோனி படத்தில் 'தல' தோனியாகவே நடித்து ஹெலிகாப்டர் ஷாட் எல்லாம் அடித்த சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று நம்முடன் இல்லை என்ற செய்தியையே இன்னும் நம்மால் நம்ப முடியவில்லை.
Recommended Video
இளமையும், துடிப்பும், திறமையும், வெற்றியையும் கொண்ட இளம் நடிகர் தனது 34 வயதுக்குள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அப்படி என்னதான் நேர்ந்தது என பலரும் குழம்பிப் போய் தவித்து வருகின்றனர்.
மன அழுத்தம் தான் காரணம் என்றும், இல்லை காதல் தோல்வியாக இருக்கலாம் என்றும், தற்கொலையிலும் சந்தேகம் என்றும் பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

வரலாறும் டைம் மெஷினும்
இன்று மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்குப் போட்ட நிலையில், நண்பர்களால் கண்டெடுக்கப்பட்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் அந்த வீட்டில் இருக்கும் வரலாற்று சிறப்பம்சங்கள், டைம் மெஷின் தேடல் தொடர்பான பல விஷயங்கள் குறித்த தகவல் நிச்சயம் உங்கள் கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.

பிரம்மாண்ட டெலஸ்கோப்
கடந்த 2018ம் ஆண்டு ஏசியன் பெயிண்ட்ஸ் Where the heart season 2 நிகழ்ச்சியில் தனது வீட்டை சுற்றி காண்பித்து, பிரத்யேகமாக பேசியுள்ளார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். டைம் மெஷின், டைம் டிராவல், ஸ்பேஸ் பற்றிய அதிக ஆர்வம் கொண்ட இவர், தனது வீட்டின் ஒரு அறையில் பிரம்மாண்ட டெலஸ்கோப் ஒன்றையும் வைத்துக் கொண்டு, சனி கிரகத்தின் வளையங்கள் வரை இங்கிருந்தே கண்டு ரசித்து வந்தார்.

முதல் கனவு
நாசாவில் வேலை சேர வேண்டும் என்பதே சிறு வயது முதல் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கனவாக இருந்தது. நடிகராக பிரபலம் ஆன பின்னர், நாசாவுக்கு சென்று, அந்த யூனிஃபார்மை அணிந்துக் கொண்டு அவர் எடுத்த புகைப்படங்கள் எல்லாம் தற்போது பார்த்தால், கண்களை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வெளியே வருவது நிச்சயம்.

பொக்கிஷங்கள்
பழமையை மிகவும் விரும்பும் நபராக சுஷாந்த் சிங் ராஜ்புத் இருந்துள்ளார் என்பதை இந்த வீடியோவை பார்த்தாலே நன்கு அறிந்து கொள்ள முடிகிறது. பாஸிகர் உள்ளிட்ட பழைய பாலிவுட் படங்களின் போஸ்டர்கள், கேமரா, புகைப்படங்கள் என தனது வீட்டின் ஒவ்வொரு அறையையும் பொக்கிஷமாக மாற்றி வைத்திருக்கும் ரசனை மிகுந்தவர் சுஷாந்த், இப்படி மறைந்தது பலரையும் அதிர்ச்சியடையவே செய்திருக்கிறது.

கனவு கார்
சின்ன வயதில் நீல நிறத்தில் மசாராட்டி காரின் மினியேச்சர் பொம்மையை வைத்து விளையாடி சுஷாந்த் சிங் ராஜ்புத் பாலிவுட்டின் பாப்புலரான நடிகர் ஆன பிறகு, அதே போன்று நீல நிற மசாரட்டி காரை வாங்கினேன் என்பதையும் அந்த வீடியோவில், தனது கனவு நினைவான தருணத்தை கூறியிருந்தது தற்போது ரசிகர்களை உருக வைத்து வருகிறது.

புத்தக பிரியர்
புத்தகங்கள், உலக தத்துவங்கள் என பலவற்றையும் வாசிக்கும் பழக்கம் கொண்டவராக சுஷாந்த் சிங் ராஜ்புத் இருப்பது, அவர் யோசிக்கும் அறை என்று காட்டும் அறையை பார்த்தாலே அவரது ஞானம் எந்த அளவுக்கு இருந்தது என்பது புரிகிறது. இப்படி பல விசயங்களில் கவனத்தை செலுத்தி வந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அப்படி என்ன மன அழுத்தம் வந்தது என்பது தான் பில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.

பிடித்த விஷயங்கள்
அந்த வீடியோவின் இறுதியில் தனக்கு பிடித்தமான விஷயங்களை பற்றிய கேள்விகளுக்கும் சிரித்த முகத்துடனே பதிலளித்துள்ளார் சுஷாந்த் சிங் ராஜ்புத். பாலிவுட் சினிமாவா? உலக சினிமாவா? என்ற கேள்விக்கு உலக சினிமாதான் பிடிக்கும் என்றும், ரியல் லைஃப் படமா? சயின்ஸ்ஃபிக்ஷன் படமா? என்ற கேள்விக்கு சயின்ஸ் ஃபிக்ஷன் படம் என்றும் கூறியுள்ளார் சுஷாந்த் சிங். இனி அவரது அந்த அழகிய சிரிப்பை படங்களில் மட்டுமே பாலிவுட் ரசிகர்கள் கண்டு ரசிக்க முடியும் என்பது தான் வேதனையிலும் ஆறுதல்.


Click it and Unblock the Notifications











