twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதுவும் கடந்து போகும்.. அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்: நடிகர் ரஜினிகாந்த்

    |

    சென்னை: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுவும் கடந்து போகும் என தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    Rajinikanth wishing for tamil new year 2020

    உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

    பலியானோரின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் போலி கணக்குகள்... வேகமாக வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்த, 'நெடுவாலி'!இன்ஸ்டாகிராமில் தன் பெயரில் போலி கணக்குகள்... வேகமாக வந்து ட்விட்டரில் விளக்கம் அளித்த, 'நெடுவாலி'!

    பிரதமர் மோடி உரை

    பிரதமர் மோடி உரை

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டது. அந்த ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று காலை 10 மணியளவில் உரையாற்றுகிறார் என தகவல் வெளியானது.

    வேகமாக பரவி வருகிறது

    வேகமாக பரவி வருகிறது

    இதனால் ஊரடங்கு உத்தரவுவை பிரதமர் நீட்டிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று முக கவசம் அணிந்தபடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தும்பொழுது, இந்தியாவில் 500 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நாட்டில் நோய் தொற்று மிக வேகமுடன் பரவி வருகிறது என்றார்.

    ஊரடங்கு நீட்டிப்பு

    ஊரடங்கு நீட்டிப்பு

    மேலும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பெரிய அளவிலான பாதிப்புகளை தவிர்த்து உள்ளோம். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவாலேயே இது சாத்தியமானது என்று கூறிய அவர் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்தார்.

    இனிதாக இருக்கட்டும்

    இனிதாக இருக்கட்டும்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை பதிவிட்டுள்ளார். அதில் இந்த புதிய ஆண்டு இனிதாக இருக்கட்டும். இந்த துயரமான நேரத்தில் உயிரை பணயம் வைத்து மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு என் நெஞ்சார்ந்த பாராட்டுகள்.

    இதுவும் கடந்து போகும்

    அரசாங்கம் விதித்திருக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடித்து பாதுகாப்பாக இருங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவும் கடந்து போகும் என்பதை ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அவரது இந்த டிவிட்டை பலரும் லைக் செய்து வருவதுடன் ரீடிவிட்டும் செய்து வருகின்றனர்.

    English summary
    Actor Rajinikanth wishing for tamil new year. He mentioned that This too will pass with hashtag.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X