ஸ்ரீதேவி பற்றிய இந்த வீடியோவை பார்த்தால் அழுதுடுவீங்க
சென்னை: ஸ்ரீதேவி பற்றி அவரின் கணவர் போனி கபூர் கடைசியாக வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஃபீல் பண்ணுகிறார்கள்.
நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்ற ஸ்ரீதேவி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார். மது போதையில் குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அவர் இறந்து இன்றுடன் ஓராண்டாகிவிட்டது. ஸ்ரீதேவி இறந்த பிறகு அவரின் கணவர் போனி கபூர் ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். துபாய் திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி சிரித்த முகமாக நடனமாடி, பேசியபோது எடுக்கப்பட்ட வீடியோ அது.
22வது திருமண நாளையொட்டி போனி கபூர் அந்த வீடியோவை ஸ்ரீதேவியின் ட்விட்டர் கணக்கில் வெளியிட்டார். ஸ்ரீதேவியின் நினைவு நாளான இன்று அவரின் ரசிகர்கள் அந்த வீடியோவை பார்த்து கண்ணீர் சிந்துகிறார்கள்.
திருமண நிகழ்ச்சிக்காக வெளிநாடு சென்ற ஸ்ரீதேவி இப்படி சவப்பெட்டியில் திரும்பி வருவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.


Click it and Unblock the Notifications











