#Petta: இந்த வீடியோவை பார்த்துவிட்டு என்ன சொல்வதென்றே தெரியல!
சென்னை: ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை பார்த்து நெட்டிசன்கள் வியந்து கொண்டிருக்கின்றனர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம் வரும் ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.
பேட்ட படத்தின் ட்ரெய்லரில் ரஜினி செம மாஸாக, ஸ்டைலாக இருந்தார். அவர் கொனட்டி கொனட்டி நடந்து வந்த அழகே அழகு. அப்படி அவர் ஸ்டைல் பண்ணியதை பார்த்து எவ்வளவு காலமாகிவிட்டது.

ரஜினி குறும்பு செய்வது, ஸ்டைலாக நடந்து வருவது ஆகியவற்றை பார்க்கும்போது பல காலம் கழித்து ரஜினி ரசிகர்களுக்கு செம விருந்து காத்திருக்கிறது என்பது மட்டும் நன்றாக தெரிகிறது.
ட்ரெய்லரை மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ஒரு வீடியோவை நெட்டிசன்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
நம் கண்ணிலும் அந்த வீடியோ பட்டது. அதை உங்களுடன் ஷேர் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications











