ட்விட்டரை தெறிக்க விடும் 'வெயிட்'டு டான்ஸ்: சூர்யா இதை கண்டிப்பா பார்க்கோணும்

By Siva

Recommended Video

ட்விட்டரை தெறிக்க விடும் 'வெயிட்'டு டான்ஸ்

சென்னை: ஏழாம் அறிவு படத்தில் சூர்யா ஆடிய பாடலுக்கு இரண்டு பேர் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாஸன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய எல்லே லமா பாடல் மிகவும் பிரபலம் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் இரண்டு பேர் அந்த பாடலுக்கு நடுத்தெருவில் டான்ஸ் ஆடிய வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்களும் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ட்விட்டர்

இதில் ஆச்சரியம் என்னவென்றால் மொழி தெரியாதவர்கள் கூட அந்த இருவரின் டான்ஸை பார்த்துவிட்டு பாராட்டி, வீடியோவை ஷேர் செய்கிறார்கள். மிஸ்டர் என்.ஜி.கே., நீங்க இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும். பார்த்தால் அந்த இரண்டு பசங்களையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்.

வெயிட் டான்ஸ்

வெயிட் டான்ஸ்

எல்லே லமா பாடலுக்கு டான்ஸ் ஆடிய பசங்க சற்று குண்டாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள் ஓ, இதற்கு பெயர் தானோ வெயிட்டான டான்ஸோ என்று கேட்டுள்ளனர். சூர்யாவுக்கு எத்தனையோ வெற்றிப் பாடல்கள் உண்டு அதில் ஏலே லாமாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வராகவன்

செல்வராகவன்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான என்.ஜி.கே. படத்திற்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. இதையடுத்து என்.ஜி.கே. படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என்று சூர்யா ரசிகர்கள் செல்வராகவனிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

என்.ஜி.கே. அப்டேட் கேட்டுக் கதறியும் செல்வராகவன் கண்டுகொள்ளாமல் இருந்ததை எல்லாம் அவர்கள் மறக்கவில்லை. இருப்பினும் நமக்கு அப்டேட் கிடைப்பதை விட சூர்யா அண்ணாவுக்கு ஒரு மாஸ் படம் கிடைப்பது தான் முக்கியம் என்று ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதனால் மறுபடியும் முதலில் இருந்து கெஞ்சுவது என்று முடிவு செய்துவிட்டனர். ரசிகர்கள் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும். நீங்க கொடுத்து வைத்தவர் சூர்யா. என்.ஜி.கே. 2 வருமா, வராதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இதற்கிடையே கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன்லால், சயீஷா உள்ளிட்டோர் நடித்துள்ள காப்பான் படத்திற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X