கிரேனில் தொங்கிக் கொண்டே சிம்புவின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ரசிகர்: வீடியோ இதோ

By Siva

சென்னை: தீவிர ரசிகர் ஒருவர் கிரேனில் தொங்கியபடி சிம்புவின் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த செக்கச் சிவந்த வானம் படம் கடந்த 27ம் தேதி வெளியானது.

படம் தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது.

கொண்டாட்டம்

கொண்டாட்டம்

செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்த அனைவரும் சிம்புவின் நடிப்பை பாராட்டியுள்ளனர். படத்தில் நட்சத்திர பட்டாளமே இருக்கும்போதிலும் சிம்பு தனித்து தெரிகிறார். சிம்புவின் ரசிகர்கள் அல்லாதவர்கள் கூட அவரின் நடிப்பை பாராட்டியது தான் கவனிக்க வேண்டிய விஷயம். இந்நிலையில் சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் செய்துள்ள காரியம் பார்ப்பவர்களை பதற வைத்துள்ளது.

பாலாபிஷேகம்

சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவர் செக்கச் சிவந்த வானம் படத்தை கொண்டாட சிம்புவின் கட்அவுட்டுக்கு கிரேனில் தொங்கியபடி பாலாபிஷேகம் செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நிச்சயம் சிம்புவே கோபப்படுவார். தனக்காக தனது ரசிகர்கள் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுப்பதை அவர் ஒருபோதும் விரும்ப மாட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

உங்களுக்காக சிம்பு திருந்திவிட்டார். அவருக்காக நீங்கள் இது போன்று செய்வதை நிறுத்தி எப்பொழுது திருந்தப் போகிறீர்கள்?. உங்களை மகிழ்விக்கும் அவர் சந்தோஷப்படும்படி நடந்து கொள்ளுங்கள். உயிர் முக்கியம் ரசிகர்களே. உங்களின் குடும்பம் முக்கியம். இதையே பல நடிகர்கள் சொல்லியும் ரசிகர்கள் கேட்பதாக தெரியவில்லை.

அறிவுரை

சிம்புவை கொண்டாடுங்கள் தவறு இல்லை. நீங்கள் உயிரோடு இருந்தால் தானே அவரை கொண்டாட முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X