twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்ன மனுஷன்யா ஜானி டெப்.. காசுக்காக கேஸ் போடல.. எக்ஸ் மனைவி அவ்வளவு பணத்தையும் தர தேவையில்லையா?

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: கடந்த 2018ம் ஆண்டு தொடங்கிய அவதூறு வழக்கில் சமீபத்தில் ஜானி டெப்புக்கு சாதகமாக அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    Recommended Video

    Johnny Depp-Amber Heard இடையே என்ன பிரச்சினை? | #Hollywood

    மேலும், நடிகர் ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் 10.35 மில்லியன் டாலர் பணத்தை நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டும் என அந்த நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு போட்டது.

    நடிகையின் வழக்கறிஞர் அவ்வளவு தொகையை ஆம்பர் ஹெர்டால் கொடுக்க முடியாது என சமீபத்தில் புலம்பிய நிலையில், ஜானி டெப்பின் வழக்கறிஞர் அளித்த பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

    திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம்.. வாழ்த்து சொன்ன ரசிகை.. நன்றி கூறிய நயன்தாரா!திருப்பதியில் வரிசையில் நின்று சாமி தரிசனம்.. வாழ்த்து சொன்ன ரசிகை.. நன்றி கூறிய நயன்தாரா!

    ஜானி டெப்புக்கு வெற்றி

    ஜானி டெப்புக்கு வெற்றி

    பெண்களுக்கு எதிரான அவதூறு வழக்கில் வெற்றி கொண்ட கேப்டன் ஜேக்ஸ் பேரோ என உலகம் முழுவதும் நடிகர் ஜானி டெப்பை கொண்டாடி தீர்த்தனர். இரண்டாவது தாரமாக ஆக்வாமென் படத்தில் நடித்த நடிகை ஆம்பர் ஹெர்டை திருமணம் செய்து கொண்ட இரு ஆண்டுகளிலேயே இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் வெடித்த நிலையில், விவாகரத்து ஏற்பட்டது.

    அவதூறு வழக்கு

    அவதூறு வழக்கு

    நடிகர் ஜானி டெப் ஒரு ‘காமக்கொடூரன்' என பேட்டி ஒன்றில் நடிகை ஆம்பர் ஹெர்ட் பேசியது மீடூ இயக்கத்தின் மூலம் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியனின் அடுத்த பாகத்தில் இருந்தே அவரை படக்குழு நீக்கியது. அந்த சூழலில் தான் ஜானி டெப் நீதிமன்றத்தில் நடிகை ஆம்பர் ஹெர்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார்.

    10 மில்லியன் டாலர் ஃபைன்

    10 மில்லியன் டாலர் ஃபைன்

    நடிகர் ஜானி டெப்புக்கு 10.35 மில்லியன் டாலர் அபராதத் தொகையாக ஆம்பர் ஹெர்ட் வழங்க வேண்டும் என்றும், அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இதன்காரணமாக நடிகை ஆம்பர் ஹெர்ட் சோகத்தின் உச்சிக்கே சென்று பெண்களுக்கு எப்போதும் நீதியே கிடைத்ததில்லை என புலம்பித் தள்ளி இருந்தார்.

    இந்திய உணவகத்தில் பார்ட்டி

    இந்திய உணவகத்தில் பார்ட்டி

    கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்ற நிலையில், தனது வாழ்க்கை திரும்ப கிடைத்து விட்டது என நடிகர் ஜானி டெப் பெருமூச்சு விட்டு இருந்தார். மேலும், இந்திய உணவகத்தில் 48 லட்சம் ரூபாய்க்கு பார்ட்டி கொண்டாடியதாகவும் தகவல்கள் வெளியாகின.

    ஆம்பர் ஹெர்ட் புலம்பல்

    ஆம்பர் ஹெர்ட் புலம்பல்

    அவதூறு வழக்கில் நடிகை ஆம்பர் ஹெர்ட் 50 மில்லியன் டாலர் கொடுக்க வேண்டும் என ஜானி டெப் வழக்கு தொடர்ந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜானி டெப் 100 மில்லியன் டாலர் தனக்கு கொடுக்க வேண்டும் என ஆம்பர் ஹெர்ட் வழக்கு தொடர்ந்தார். ஆனால், 10 மில்லியன் டாலர் நஷ்ட ஈடாக வழங்க ஆம்பர் ஹெர்டுக்கு உத்தரவிட்ட நிலையில், அவ்வளவு பெரிய அமெளண்ட்டுக்கு எங்கே போவேன் என புலம்பித் தள்ளி இருக்கிறார் என அவரது வழக்கறிஞர் சமீபத்தில் கூறியிருந்தார்.

    காசுக்காக கேஸ் போடல

    காசுக்காக கேஸ் போடல

    இந்நிலையில், சமீபத்தில் பிரபல மீடியா ஒன்றுக்கு பேட்டியளித்த ஜானி டெப்பின் வழக்கறிஞர் பெஞ்சமின் ச்சூ இந்த வழக்கை காசுக்காக ஜானி டெப் போடவில்லை என்றும், அவர் மீதான கலங்கத்தை துடைக்கவே போட்டார் என்றும், ஆம்பர் ஹெர்ட் 10 மில்லியன் டாலர் தொகையை நஷ்ட ஈடாக தர வேண்டும் என்கிற நிலை உருவாகாமலும் இருக்கலாம் எனக் கூறியுள்ளார்.

    English summary
    'This was never about money' Johnny Depp lawyer’s statement may give big relief to Amber Heard. Actor Johnny Depp just want to clear the stains.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X