Don't Miss!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- News
இலவசங்கள் தொடர்பான வாக்குறுதிகளை தர கூடாது என கட்சிகளுக்கு தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்
- Technology
கம்மி விலையில் 50MP கேமரா, 6000mAh பேட்டரியுடன் அறிமுகமான சூப்பர் போன்.!
- Lifestyle
செவ்வாய் 66 நாட்கள் ரிஷப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகுது...
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விக்ரமில் ரோலக்ஸ்...அப்போ ராக்கெட்ரி படத்தில்...சூர்யாவின் ரோல் இது தான்
சென்னை : விக்ரம் படம் ரிலீசாகி 25 நாட்கள் ஆகி விட்டது. ஆனாலும் தற்போது வரை விக்ரம் படம் பற்றி ரசிகர்களும், திரைத்துறையினரும் இதுவரை பேசி முடிக்கவில்லை.
விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்தது என்னவோ கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் போன்றவர்கள் தான் என்றாலும் கடைசி 5 நிமிட காட்சிகளில் மிரட்டல் வில்லனாக ரோலக்ஸ் சார் ரோலில் நடித்த சூர்யா பற்றி தான் அதிகமானவர்கள் பேசி வருகின்றனர்.
விக்ரம் படத்திற்கு நடித்ததற்காக சூர்யா சம்பளம் ஏதும் வாங்கவில்லை. கமல் மீதான மரியாதை காரணமாக, லோகேஷ் கனகராஜ் கேட்டதும் ரோலக்ஸ் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் தான் படத்தின் வெற்றியை கொண்டாடுவதற்காக கமல், சூர்யாவிற்கு ரோலக்ஸ் வாட்ச் பரிசளித்தார்.
தொடர்ந்து அதிர்ச்சி கொடுக்கும் ஹேமா.. கதறியழும் வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் அடுத்தடுத்த ட்விஸ்ட்!

மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா
விக்ரம் படத்தை தொடர்ந்து தற்போது மாதவன் இயக்கி, நடித்துள்ள ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்திலும் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். சூர்யாவும், மாதவனும் பல ஆண்டுகளாகவே நல்ல நண்பர்களாம். அதனால் தான் ராக்கெட்ரி படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யாவை, மாதவன் செலக்ட் செய்தாராம். அவரும் கேட்ட உடனேயே ஓகே சொல்லி விட்டாராம். ராக்கெட்ரி படத்தின் தமிழ் வெர்சனில் தான் சூர்யா கெஸ்ட் ரோல் செய்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் அந்த ரோலில் நடித்துள்ளார்.

இதுக்கும் சம்பளம் வாங்கலியா
விக்ரம் படத்திற்கு மட்டுமல்ல ராக்கெட்ரி படத்திலும் கெஸ்ட் ரோலில் நடிக்க சூர்யா, சம்பளம் ஏதும் வாங்கிவில்லை என மாதவனே தெரிவித்துள்ளார். போக்குவரத்து செலவு உள்ளிட்ட எதற்கும் அவர் பணம் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். சூர்யா மட்டுமல்ல ஷாருக்கானும் ராக்கெட்ரி படத்தில் நடிக்க சம்பளம் வாங்கவில்லையாம்.

சூர்யா என்ன ரோலில் நடித்துள்ளார்
ராக்கெட்ரி படத்தில் சூர்யா, பத்திரிக்கையாளர் ரோலில் நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன் தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லையாம். இந்த படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலில் தான் அவர் நடித்துள்ளாராம். நம்பி நாராயணன் ரோலில் நடித்திருக்கும் மாதவனை பேட்டி எடுப்பது போன்ற ஒரு சீனில் தான் சூர்யா நடித்துள்ளாராம்.

5 மொழிகளில் ரிலீசாகும் ராக்கெட்ரி
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோ பிக்கான ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் படத்தில் நம்பி நாராயணனாக மாதவனும், அவருடைய மனைவி மீனா நாராயணனாக சிம்ரனும் நடித்துள்ளனர். தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ராக்கெட்ரி படம் ஜுலை 1 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

சூர்யாவை கொண்டாடும் ரசிகர்கள்
தொடர்ந்து பல படங்களில் கெஸ்ட் ரோலில், அதுவும் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்து வரும் சூர்யாவை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சம்பளம் வாங்காமல் நடித்தும் நடிக்க சில நிமிட காட்சிகளிலேயே அனைவரையும் தன்னை பற்றியே பேச வைத்து விடுகிறார். இவர் வரும் சீனுக்காகவே படமும் ஹிட் ஆகி விடுகிறது. விக்ரமில் ரோலக்ஸ், ராக்கெட்ரியில் சூர்யா என கலக்கி வருகிறாரே என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.