This Wednesday.. ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்ட பதிவு.. அமரன் பட அறிவிப்பா.. ரசிகர்கள் காத்திருப்பு!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் -சாய் பல்லவி கூட்டணியில் உருவாகியுள்ள படம் அமரன். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் முதல் முறையாக நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக தெரிகிறது. இதற்காக சில காலங்கள் அவர் தன்னுடைய ஹேர் ஸ்டைலை வெளிப்படுத்தாமல் குல்லா அணிந்து வந்ததையும் பார்க்க முடிந்தது.
இந்நிலையில் இந்த படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே வரும் புதன்கிழமை இந்த படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன்: நடிகர் கமல்ஹாசன் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்து மாஸ் காட்டி வருகிறார். அவரது நடிப்பில் இந்த ஆண்டிலேயே அடுத்தடுத்து கல்கி 2898 ஏடி மற்றும் இந்தியன் 2 படங்கள் ரிலீசாகியுள்ளன. இந்நிலையில் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தை தயாரித்துள்ளார் கமல்ஹாசன். மேலும் சிம்பு நடிப்பில் எஸ்டிஆர் 48 படத்தையும் அறிவித்துள்ளார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ள சூழலில் அமரன் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி இணைந்துள்ளார்.
அமரன் படம்: அமரன் படத்தின் சூட்டிங் காஷ்மீரில் அதிகளவில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் திஸ் வெட்னெர்ஸ் டே என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்கமல் நிறுவன பதிவு: ராஜ்கமல் நிறுவனத்தின் எக்ஸ் தள பக்கத்தில் கமலின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் தக் லைஃப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அவர் அன்பறிவ் மாஸ்டர்களின் இயக்கத்தில் இணையவுள்ளார். தற்போது தயாரிப்பாளராக அமரன் படத்தை தயாரித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களின் அப்டேட்கள் மட்டுமே அடுத்ததாக ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் கமல் இணையவுள்ள படம் குறித்து முன்னதாகவே அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமரன் பட ரிலீஸ் அப்டேட்: இதனால் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டைதான் வரும் புதன்கிழமை ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காமெடியை பிரதானமாக கொண்டு தன்னுடைய படங்களை கொடுத்துவந்த சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த ஆக்ஷன் களத்தில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கியுள்ள அமரன் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











